என்னய்யா சொல்றிங்க? மீண்டும் தொடரப்போகும் ரோஹித் சர்மா – சேட்டன் சர்மா, புதிய தகவலால் ரசிகர்கள் குழப்பம்

Rohit Sharma Chetan Sharma
- Advertisement -

2023 புத்தாண்டில் இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் இந்திய கிரிக்கெட் அணி களமிறங்குகிறது. அதில் முதலாவதாக துவங்கும் 3 டி20 தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையில் பெரும்பாலும் இளம் வீரர்கள் களமிறங்குகிறார்கள். முன்னதாக நடைபெற்ற டி20 உலக கோப்பையில் ரோகித் சர்மா விட்ட சீனியர்கள் சுமாராக செயல்பட்டதால் அவர்களை கழற்றி விட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து 2024 டி20 உலக கோப்பைக்கு முன்பாக புதிய அணியை உருவாக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. அதனாலேயே டி20 உலக கோப்பைக்கு அடுத்ததாக நடைபெற்ற நியூசிலாந்து டி20 தொடரிலும் இப்போது நடைபெறும் இலங்கை டி20 தொடரிலும் ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் வீரர்கள் வாய்ப்பு பெற்று விளையாடுகிறார்கள்.

BCCI-and-Rohit

- Advertisement -

அதே சமயம் சமீப காலங்களில் அணி தேர்வு சுமாராக இருந்ததால் அதிருப்தியடைந்த பிசிசிஐ சேட்டன் சர்மா தலைமையிலான தேர்வுக்குழுவை கூண்டோடு நீக்கி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. அத்துடன் 2023இல் சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பையில் கடைசி வாய்ப்பாக கேப்டன் ரோகித் சர்மா தலைமையிலான முதன்மை அணி விளையாடும் என்றும் தெரிய வந்தது. அதில் ரோகித் சர்மா வெற்றியை பதிவு செய்ய தவறும் பட்சத்தில் ஒருநாள் கிரிக்கெட்டிலும் அவருக்கு பதிலாக புதிய இளம் கேப்டன் அறிவிக்கப்படுவார் என்று செய்திகள் வெளியானது.

ரசிகர்கள் குழப்பம்:
அந்த நிலையில் 2022ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் சந்தித்த வீழ்ச்சியை விவாதிக்கும் பிசிசிஐயின் மறு ஆய்வு கூட்டம் ஜனவரி 1ஆம் தேதியன்று மும்பையில் நடைபெற்றது. ரோஜர் பின்னி, ஜெய் ஷா ஆகியோரது தலைமையில் நடைபெற்ற அந்தக் கூட்டத்தில் 2023 உலக கோப்பைக்கு 20 உத்தேச வீரர்கள் தேர்வு செய்யப்பட்டதாகவும், அவர்கள் ஐபிஎல் தொடரில் முழுமையாக விளையாடாமல் தேவையான ஓய்வெடுப்பதற்கான வழிவகை செய்யப்படும் என்றும், மீண்டும் யோ-யோ டெஸ்ட் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.

Rohit-Sharma

இந்நிலையில் அதே கூட்டத்தில் கேப்டன் ரோகித் சர்மா, பயிற்சியாளர் ராகுல் டிராவிட், என்சிஏ தலைவர் விவிஎஸ் லக்ஷ்மன், சேட்டன் சர்மா ஆகியோரும் கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தின் முடிவில் ரோகித் சர்மாவின் கேப்டன்ஷிப் மீது பிசிசிஐ அதிருப்தியாகவில்லை என்றும் அவர் தொடர்ந்து கேப்டனாக செயல்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது. அதே சமயம் பதவி நீக்கப்பட்ட சேட்டன் சர்மா மீண்டும் தேர்வுக்குழு தலைவர் பதவியில் தொடர்வார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது.

- Advertisement -

குறிப்பாக புதிய தேர்வுக்குழுவில் தெற்கு மண்டல உறுப்பினராக வெங்கடேஷ் பிரசாத், கிழக்கு மண்டல உறுப்பினராக எஸ்எஸ் தாஸ், மேற்கு மண்டல உறுப்பினராக முகுந்த் பர்மர், சலில் அங்கோலா, சமீர் டிஹே ஆகியோர் புதிய உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட உள்ள நிலையில் வடக்கு மண்டலம் சார்பில் யாரும் விண்ணப்பிக்கவில்லை என்று தெரிய வருகிறது. எனவே அந்த இடத்திற்கு விண்ணப்பித்துள்ள சேட்டன் சர்மா தொடர்ந்து தேர்வுக்குழு தலைவராக தொடர்வர் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. இது பற்றி பிசிசிஐ அதிகாரி ஒருவர் பேசியது பின்வருமாறு.

Chetan-1

“ரோகித் சர்மா டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து செயல்படுவார். இந்த 2 வகையான கிரிக்கெட்டிலும் அவருக்கு பதில் வேறு ஒருவரை நியமிப்பது பற்றி எந்த பேச்சு வார்த்தையும் நடைபெறவில்லை. மேலும் அவருடைய ஒருநாள் மற்றும் டெஸ்ட் கேப்டன்ஷிப் புள்ளி விவரங்களை பாருங்கள். அது மிகவும் சிறப்பாக உள்ளது. ஏற்கனவே விண்ணப்பிக்க வேண்டாம் என்று சொல்லப்படாமல் இருந்தால் சேட்டன் சர்மா முதல் இடத்தில் விண்ணப்பித்திருக்க மாட்டார். அதுவே ஒரு அறிகுறி. எனவே அடுத்த 10 மாதங்களில் இந்தியா உலக கோப்பையில் விளையாட உள்ள நிலையில் சேட்டன் மற்றும் ஹர்விந்தர் தொடர்ந்து செயல்படுவார்கள். அவருடன் 3 புதிய உறுப்பினர்கள் மட்டும் சேர்க்கப்படுவார்கள்” என்று கூறினார்.

இதையும் படிங்கடிரைவர் இல்லாம நானும் உங்க வயசுல இதே மாதிரி விபத்தை சந்திச்சேன் – ரிஷப் பண்ட்டுக்கு கபில் தேவ் அன்பான அட்வைஸ்

இதனால் குழப்பமடையும் ரசிகர்கள் எங்களை திசை திருப்புவதற்காக கடந்த மாதம் அவர் நீக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியிட்டீர்களா என்று கோபத்தை வெளிப்படுத்துகிறார்கள். சொல்லப்போனால் இலங்கைக்கு எதிராக நடைபெறும் டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை சேட்டன் சர்மா தான் தேர்வு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement