ஸ்மித் மற்றும் வார்னர் ஆகியோருக்கு இந்த ஆண்டு ஐ.பி.எல் இல்லை – ராஜீவ் சுக்லா அதிரடி !

David3
- Advertisement -

தென்ஆப்பிரிக்க அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் பந்தை ரிவர்ஸ் ஸ்விங் செய்வதற்காக திட்டமிட்டு சேதப்படுத்திய விவகாரம் இன்று மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.இன்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோருக்கு ஒரு வருடம் கிரிக்கெட் விளையாடுவதற்கு தடை விதித்தது.
smith

முன்னதாக ஆஸ்திரேலிய வீரர்களின் இந்த செயல் கடும் விமர்சனத்திற்கு உண்டான நிலையில் அணியின் கேப்டன் மற்றும் துணைக்கேப்டன் ஏற்கனவே இருவரும் பதவி விலகினர்.மேலும் பந்தை சேதப்படுத்திய விவகாரம் குறித்து விசாரணை நடத்திய ஐசிசி கேமரூன் பேன்கிராப்ட்டிற்கு 75% அபராதமும், அணி கேப்டனான ஸ்டீவன் ஸ்மித்திற்கு 100% அபராதத்துடன் கூடிய ஒரு டெஸ்டில் விளையாடுவதற்கான தடையையும் விதித்தது.

- Advertisement -

இந்நிலையில் இந்த பிரச்சனையை மிகவும் சீரியஸாக எதிர்நோக்கியுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் தற்போது பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஈடுபட்ட வீரர்களுக்கு வாழ்நாள் தடை விதிப்பதை பற்றி யோசித்துவருவதாக முன்னதாக தகவல்கள் வெளியாகின.

David Warner

இந்நிலையில் தற்போது ஆஸ்திரேலிய நிர்வாகம் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் வார்னருக்கு ஒரு வருட தடை விதித்த சற்று நேரத்தில் வரும் ஏப்ரல் ஏழாம் தேதி நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரிலும் இவர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்று ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ராஜீவ் சுக்லா பேசுகையில் “பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தால் ஒரு வருடம் தடைவிதிக்கப்பட்டுள்ள ஸ்டீவன் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் இந்த ஐபிஎல்-இல் பங்கேற்க முடியாது. எனவே அவர்களுக்கு பதிலாக மாற்று வீரர்கள் விளையாடுவார்கள் என்று தெரிவித்தார்.

Advertisement