INDvsWI : 1000 ஆவது ஒருநாள் போட்டியில் விளையாடும் இந்திய அணி சந்தித்துள்ள – மோசமான நிலை

ind
- Advertisement -

அண்மையில் தென் ஆப்பிரிக்க நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியானது அங்கு நடைபெற்ற டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை மோசமான வகையில் இழந்தது. பலம் வாய்ந்த இந்திய அணியானது அனுபவம் குறைந்த தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக தோல்வியை சந்தித்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனை தொடர்ந்து தற்போது மீண்டும் இந்த தோல்விகளுக்கு பதிலடி தரும் விதமாக அடுத்ததாக இந்திய அணி தங்களது சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்க இருக்கிறது.

INDvsWI

- Advertisement -

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வெஸ்ட் இண்டீஸ் அணியானது இந்திய அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இருக்கிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி பிப்ரவரி 6ஆம் தேதி அகமதாபாத் நகரில் துவங்க உள்ளது.

இந்த ஒருநாள் போட்டிகள் அனைத்துமே அகமதாபாத் நகரிலும், டி20 போட்டிகள் அனைத்தும் கொல்கத்தாவிலும் நடைபெற உள்ளன. முன்னதாக கொல்கத்தாவில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மைதானங்களில் 75% ரசிகர்களுக்கு போட்டியை நேரில் கண்டுகளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ind

ஆனால் இந்திய அணி பிப்ரவரி 6-ஆம் தேதி நடைபெறவுள்ள முதல் ஒரு நாள் போட்டியில் பங்கேற்பதன் மூலம் தங்களது 1000 ஆவது ஒருநாள் போட்டியை விளையாட இருக்கிறது. இவ்வேளையில் அகமதாபாத் நகரில் நடைபெறும் இந்த 3 போட்டிகளை காண ரசிகர்களுக்கு மைதானத்தில் அனுமதி இல்லை என்று அகமதாபாத் நகர அரசாங்கம் அறிவித்துள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : INDvsWI : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டி20 தொடர் – ரசிகர்களுக்கான நற்செய்தியை அறிவித்த நிர்வாகம்

இதன் காரணமாக வரலாற்றிலேயே முதல் முறையாக 1000-வது ஒருநாள் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி ரசிகர்கள் இன்றி வெறும் காலி மைதானத்தில் இந்த போட்டியை எதிர்கொள்ளும் மோசமான நிலையை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement