ஆஸ்திரேலியா அண்டர் 19 அணிக்காக தேர்வாகிய சென்னை பையன் – யார் இந்த நிவேதன் ராதாகிருஷ்ணன்?

nivethan
Advertisement

ஆஸ்திரேலிய நாட்டின் 19 வயதுக்கு உட்பட்ட கிரிக்கெட் அணியில் சென்னையில் பிறந்து வளர்ந்த ஒரு வீரர் தற்போது தேர்வாகியுள்ளார். ஜனவரி மாதம் நடைபெற உள்ள அண்டர் 19 உலக கோப்பை தொடரில் விளையாடும் அணிக்காக தேர்வாகியுள்ள இந்த நிவேதன் ராதாகிருஷ்ணன் ஆஸ்திரேலிய அணிக்காக அண்டர் 19-உலகக்கோப்பையில் விலையாடப் போவதாக செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து அவர் யார்? என்பது குறித்த தேடல் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது. உடனே அவர் குறித்த விவரங்களும் அதிகளவு பேசப்பட்டு வருகிறது.

nivethan 1

அதுமட்டுமின்றி சென்னையில் பிறந்து வளர்ந்த ஒரு சிறுவன் தற்போது ஆஸ்திரேலிய நாட்டு அணிக்காக விளையாட இருப்பது அனைவரது புருவங்களையும் உயர்த்தி பார்க்க வைத்துள்ளது. அந்த வகையில் நிவேதன் ராதாகிருஷ்ணன் குறித்த முழு தகவலையும் நாங்கள் உங்களுக்காக இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம். அதன்படி நிவேதன் ராதாகிருஷ்ணன் கடந்த 2002ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர்.

- Advertisement -

தற்போது 19 வயதாகும் இவர் ஏற்கனவே ஐபிஎல் தொடரில் டெல்லி அணியில் நெட் பவுலராக இருந்திருக்கிறார். அதுமட்டுமின்றி டிஎன்பிஎல் தொடரிலும் இவர் விளையாடி உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவர் தமிழ்நாட்டில் இருந்து ஆஸ்திரேலியா சென்று அங்கு குடியுரிமை பெற்று தற்போது ஆஸ்திரேலிய அண்டர் 19 அணிக்காக உலக கோப்பை தொடரில் விளையாட இருக்கிறார். தற்போது 18 வயதாகும் இவர் இரண்டு கையிலும் பந்து வீசுவார் என்பது இவருடைய கூடுதல் சிறப்பம்சம்.

nivethan 2

அதாவது வலது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக இடது கையிலும், இடது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக வலது கையிலும் பந்து வீசும் திறன் உடையவர் என்று கூறப்படுகிறது. தனது திறன் குறித்து பேசியுள்ள அவர் : நான் டீவியிலோ அல்லது சென்னையில் விளையாடியபோதோ எந்த ஒரு பவுலரும் ஒரே போட்டியில் இரண்டு கைகளில் பந்துவீசி பார்த்தது கிடையாது. அப்போது நான் ஏன் இது போன்று பந்துவீசக் கூடாது என்று நினைத்ததாலே இரு கைகளிலும் பந்துவீசி பயிற்சி பெற்றேன்.

இதையும் படிங்க : 2 மாச கடின உழைப்பை ஒரேயொரு மோசமான நாள் வீணாக்கிடிச்சி – சவுரவ் கங்குலி வருத்தம்

தற்போது சிறப்பான பயிற்சியுடன் தயாராகிவரும் நான் நிச்சயம் சாதிக்க நினைப்பதை நோக்கி வெற்றி நடைபோடுவேன் என்று கூறியுள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் 16 வயதுக்கு உட்பட்டோர் அணிக்காக விளையாடிய நிவேதன் ராதாகிருஷ்ணன் 5 போட்டிகளில் 172 ரன்கள் அடித்தது மட்டுமின்றி 8 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement