2 மாச கடின உழைப்பை ஒரேயொரு மோசமான நாள் வீணாக்கிடிச்சி – சவுரவ் கங்குலி வருத்தம்

Ganguly (2)
- Advertisement -

கடந்த இரு வாரங்களுக்கு முன்பு பிசிசிஐ தரப்பில் வெளியான அறிக்கையின்படி இந்திய அணியின் புதிய ஒருநாள் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டார். எதிர்வரும் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விராட் கோலிக்கு பதிலாக ரோகித் சர்மா கேப்டனாக செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டது. இதற்கு முக்கிய காரணமாக கோலியின் தலைமையில் இந்திய அணி ஒரு ஐசிசி டிராபியை கூட கைபற்றவில்லை என்று கூறப்படுகிறது.

rohith

- Advertisement -

எது எப்படி இருந்தாலும் இந்திய அணி அடுத்தடுத்த கட்டத்திற்கு நகர்ந்து வருகிறது. பல பூசல்கள், பல சர்ச்சைகள் இருந்து வரும் இவ்வேளையில் தற்போது இந்திய அணி கடந்த சில உலகக்கோப்பை தொடர்களில் எவ்வாறு செயல்பட்டுள்ளது என்பது குறித்து பிசிசிஐ-யின் தலைவர் கங்குலி பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : உண்மையை சொல்ல வேண்டும் என்றால் ஐசிசி தொடர்களில் சமீபத்தில் இந்திய அணி சிறப்பாகவே விளையாடியுள்ளது.

2017 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி மற்றும் 2019ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையில் இந்திய அணி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதிலும் குறிப்பாக 2019ஆம் ஆண்டு நடைபெற்ற அந்த உலகக் கோப்பை தொடரில் இரண்டு மாதங்களாக நாம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதியில் அரை இறுதிப் போட்டியின்போது மழை வந்து ஆட்டம் பாதியில் பாதிக்கப்பட்டு நமக்கு பின்னடைவை தந்தது.

Kohli

அந்த ஒரு மோசமான நாள் காரணமாக அந்த தொடருக்காக நாம் போட்ட இரண்டு மாத கடின உழைப்பு வீணானது என கங்குலி கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : அதனை தொடர்ந்து இந்த 4-5 வருடத்தில் நாம் விளையாடிய மோசமான தொடர் என்றால் அது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த டி20 உலகக் கோப்பை தொடர் தான். இந்திய அணியின் இந்த தோல்வி தான் ஒரு மோசமான தோல்வி என்று நான் கூறுவேன்.

- Advertisement -

இதையும் படிங்க : ஜாம்பவான் பயிற்சியாளரை வளைத்துப்போட்ட லக்னோ அணி. நல்ல முடிவு தான் – விவரம் இதோ

ஏனெனில் இந்த டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி வீரர்கள் யாரும் சுதந்திரமாக விளையாடவில்லை. அதுமட்டுமின்றி நமது அணியில் இருக்கும் வீரர்களின் திறமை முற்றிலும் வெளிப்படவில்லை. இந்தத் தோல்வியிலிருந்து இந்திய வீரர்கள் நிறைய கற்றுக் கொண்டு இருப்பார்கள் என்று கங்குலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement