ஜாம்பவான் பயிற்சியாளரை வளைத்துப்போட்ட லக்னோ அணி. நல்ல முடிவு தான் – விவரம் இதோ

IPL-bcci
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த 14-வது சீசனை தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கைப்பற்றி அசத்தியது. அதனை தொடர்ந்து அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 15-வது ஐபிஎல் தொடரானது இந்தியாவில் நடைபெறும் என்றும் அதில் ஏற்கனவே உள்ள 8 அணிகள் உடன் சேர்ந்து புதிதாக இரண்டு அணிகள் இணைத்து 10 அணிகளுடன் இந்த தொடரானது நடைபெறும் என ஏற்கனவே பிசிசிஐ அறிவித்திருந்தது. அதன்படி அடுத்த தொடருக்கான இரண்டு அணிகளையும் ஏற்கனவே ஏலத்தின் மூலம் முடிவு செய்த பிசிசிஐ லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய இரு நகரங்களின் தலைமையில் இரண்டு அணிகள் வாங்கப்பட்டதாக தெரிவித்திருந்தது.

IPL
IPL Cup

ஏற்கனவே உள்ள 8 அணிகளும் தங்கள் அணியில் நான்கு வீரர்கள் மட்டுமே தக்க வைத்துக்கொள்ளலாம் என்று கூறப்பட்ட நிலையில் அனைத்து அணிகளும் தங்கள் அணியில் தக்க வைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டிருந்தது. அதேபோன்று புதிதாக இணைந்துள்ள அணிகளும் 3 வீரர்களை நேரடியாக தேர்வு செய்து கொள்ளலாம் என்று கூறப்பட்டதால் விரைவில் புதிய அணிகள் இரண்டும் தங்கள் அணியில் வாங்க வேண்டிய மூன்று வீரர்களையும் தேர்வு செய்துவிடும்.

- Advertisement -

அதோடு இந்த இரு அணிகளும் தங்கள் அணியின் பயிற்சியாளர் மற்றும் ஊழியர்கள் என அனைவரையும் தற்போது இருந்தே தேர்வு செய்து வருகின்றனர். அந்த வகையில் லக்னோ அணியானது தங்களது தலைமை பயிற்சியாளராக ஜிம்பாப்வே அணியின் முன்னாள் ஜாம்பவானான ஆன்டி பிளவரை வரை நியமனம் செய்யும் என்று கிட்டத்தட்ட உறுதியான தகவல் கிடைத்துள்ளன.

Andy-Flower

ஏனெனில் ஏற்கனவே இங்கிலாந்து அணி டி20 உலக கோப்பையை கைப்பற்றியபோது அந்த அணிக்கு பயிற்சியாளராக ஆன்டி பிளவர்தான் இருந்தார். அது மட்டுமின்றி உலகெங்கிலும் நடைபெறும் டி20 லீக்குகளில் மிகச் சிறந்த பயிற்சியாளராக அவர் திகழ்ந்துள்ளார். அதோடு ஐ.பி.எல் தொடரிலும் அவர் பயிற்சியாளராக இருந்துள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : தோனி, சாஹா, கார்த்திக் இந்த 3 பேரில் யார் பெஸ்ட் விக்கெட் கீப்பர் – அஷ்வின் அளித்த பக்கா பதில்

எனவே நிச்சயம் லக்னோ அணிக்கு பயிற்சியாளராக அவரே நியமிக்கப்படுவார் என்பது உறுதியாகி உள்ளது. மேலும் 1992ஆம் ஆண்டு முதல் 2003 ஆண்டு வரை ஜிம்பாப்வே அணிக்காக விளையாடியுள்ள அவர் 63 டெஸ்ட் போட்டிகள், 213 ஒருநாள் போட்டிகளில் விளையாடி மட்டுமின்றி சர்வதேச அளவில் நல்ல கேப்டனாகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement