தோனி, சாஹா, கார்த்திக் இந்த 3 பேரில் யார் பெஸ்ட் விக்கெட் கீப்பர் – அஷ்வின் அளித்த பக்கா பதில்

Keep
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்து வரும் ரவிச்சந்திரன் அஷ்வின் கிட்டத்தட்ட 11 ஆண்டுகளாக இந்திய அணிக்காக விளையாடி வரும் அனுபவம் உடையவர். நடைபெற்று முடிந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது கூட சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய அஷ்வின் தற்போது தென் ஆப்பிரிக்க தொடரிலும் அசத்தி காத்திருக்கிறார். இந்நிலையில் அவரது அனுபவத்தில் இந்திய அணியின் சிறந்த விக்கெட் கீப்பர் யார் என்ற கேள்வி அவருக்கு எதிராக எழுப்பப்பட்டது.

ashwin 1

- Advertisement -

குறிப்பாக ஸ்பின்னர்களுக்கு எதிராக எந்த விக்கெட் கீப்பர் சிறப்பாக செயல்படுவார் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அஷ்வின் கூறுகையில் : இந்திய அணியின் விக்கெட் கீப்பர்கள் பொதுவாக அனைவருமே ஸ்பின்னருக்கு எதிராக சிறப்பாக செயல்படுவார்கள். குறிப்பாக தினேஷ் கார்த்திக், சாகா, தோனி ஆகிய மூவருமே ஸ்பின்னர்களுக்கு எதிராக சிறப்பாக கீப்பிங் செய்பவர்கள்தான் என்று கூறினார்.

இருப்பினும் இதில் யாராவது ஒருவரை தேர்வு செய்தாக வேண்டும் என்றால் அது மிகவும் கடினம் தான். என்னைப் பொறுத்தவரை இந்த மூவரில் தோனிதான் சிறந்த விக்கெட் கீப்பர். ஏனெனில் நான் தமிழக கிரிக்கெட் அணியில் நிறைய தினேஷ் கார்த்திக் உடன் விளையாடி இருக்கிறேன். ஆனாலும் கார்த்திக்கை விட தோனி சிறந்தவர் என்று கூறுவேன்.

ashwin

அதேபோன்று சாஹாவும் விக்கெட் கீப்பிங்கில் பின்னால் தூரமாக நிற்கும் போது சிறப்பாக செயல்படுவார். இருப்பினும் அவரை விடவும் தோனிதான் சிறப்பான விக்கெட் கீப்பர். சென்னை டெஸ்ட் போட்டியின் போது ஒருமுறை கோவன்ஸ் விக்கெட்டை வீழ்த்தியதே தோனியின் வேகத்திற்கு சான்று. அசாத்தியமான அந்த பவுன்சர் பந்தை கூட எளிதாக பிடித்து ஸ்டம்பிங் செய்தார்.

- Advertisement -

இதையும் படிங்க : INDvsRSA : டெஸ்ட் தொடருக்கான போட்டிகள் இந்திய நேரப்படி எத்தனை மணிக்கு துவங்குகிறது? – எந்த சேனல் தெரியுமா?

இது போன்ற சில முக்கியமான கடினமான இடத்தில் தோனி சிறப்பான கீப்பிங்கை வெளிப்படுத்தியுள்ளார். எனவே இவர்கள் மூவரில் தோனி தான் சிறந்த கீப்பர் என தான் கூறுவேன் என்று அஷ்வின் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement