
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான நிதீஷ்குமார் ரெட்டி கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகி அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தியிருந்தார். அதிலும் குறிப்பாக மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து மிரட்டலாட ஆட்டத்தையும் வெளிப்படுத்தி இருந்தார்.
அதன் காரணமாக இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியிலும் தேர்வு செய்யப்பட்ட அவர் இங்கிலாந்தில் தற்போது நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரிலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது இடத்தை உறுதி செய்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இந்த தொடரில் சுமாரான ஆட்டத்தை மட்டுமே வெளிப்படுத்தி வரும் நிதீஷ்குமார் ரெட்டி பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டாலும் பேட்டிங்கில் சற்று தடுமாற்றத்தையே கண்டு வருகிறார். இருப்பினும் பின்வரிசையில் தாமதமாக பேட்டிங் செய்ய வருவதாலே அவரால் பெரிய ரன்களை அடிக்க முடியவில்லை என்றும் சற்று முன்கூட்டியே அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டால் பெரிய ரன்களை குவிப்பார் என்று பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது போட்டியில் விளையாட இருக்கும் அவர் முன்னாள் இந்திய வீரரான யுவராஜ் சிங்கின் முக்கிய சாதனை ஒன்றினை முறியடிக்கும் வாய்ப்புக்காக காத்திருக்கிறார். அதுகுறித்த தகவல் வெளியாகி அனைவரும் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான யுவராஜ் சிங் :
கடந்த 2003 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகி 2012 வரை 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3 சதம் மற்றும் 11 அரைசதம் என 1990 ரன்கள் குவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் மிகச் சிறந்த ஆல்ரவுண்டராக பார்க்கப்படும் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் பெரியளவு விக்கெட்டுகளை கைப்பற்றவில்லை. 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அவர் 9 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றி இருந்தார்.
இதையும் படிங்க : அந்த தப்பை பண்ணிடாதீங்க.. தயவுசெய்து பும்ராவை ஆட வையுங்க.. வேண்டுகோள் வைத்த – மான்டி பனேசர்
இந்நிலையில் அந்த சாதனையை தான் தற்போது நிதீஷ்குமார் ரெட்டி முறியடிக்க காத்திருக்கிறார். இதுவரை இந்திய அணிக்காக 7 போட்டிகளில் விளையாடியுள்ள நிதீஷ் ரெட்டி 8 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள வேலையில் நான்காவது டெஸ்ட் போட்டியில் மேலும் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினால் 10 விக்கெட்டுகளுடன் யுவராஜ் சிங்கினை பின்னுக்குத் தள்ளுவார் என்பது குறிப்பிடத்தக்கது.