அந்த தப்பை பண்ணிடாதீங்க.. தயவுசெய்து பும்ராவை ஆட வையுங்க.. வேண்டுகோள் வைத்த – மான்டி பனேசர்

Monty Panesar and Bumrah
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது இங்கிலாந்து நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் மூன்று ஆட்டங்கள் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ள வேளையில் இங்கிலாந்து அணியானது இந்த தொடரில் இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியானது வரும் ஜூலை 23-ஆம் தேதி மான்செஸ்டர் நகரில் துவங்க இருக்கிறது.

4 ஆவது டெஸ்டில் பும்ரா கட்டாயம் விளையாடனும் : மான்டி பனேசர்

இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணி இந்த தொடரை இரண்டுக்கு இரண்டு (2-2) என்ற கணக்கில் சமன் செய்ய முடியும் என்பதனால் இந்த போட்டி இந்திய அணிக்கு மிக முக்கியமான போட்டியாக மாறியுள்ளது. இந்நிலையில் இந்த நான்காவது போட்டிக்கான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா விளையாடுவாரா? மாட்டாரா? என்பதே கடந்த சில நாட்களாக பலரது கேள்வியாகவும் இருந்து வருகிறது.

- Advertisement -

ஏனெனில் ஏற்கனவே இந்த தொடரில் மூன்று போட்டிகளில் மட்டுமே பும்ரா விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்ட வேளையில் இரண்டு போட்டிகளில் விளையாடி முடித்துள்ள பும்ரா அடுத்து வரும் இரண்டு போட்டிகளில் ஏதாவது ஒரு போட்டியில் தான் விளையாட முடியும். அதனால் பும்ரா எந்த போட்டியில் விளையாடப்போகிறார் என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஆனால் இந்திய அணிக்கு மிக முக்கியமான இந்த நான்காவது போட்டியில் அவர் கட்டாயம் விளையாட வேண்டும் என இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான மான்டி பனேசர் வேண்டுகோள் வைத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : ஜஸ்ப்ரீத் பும்ரா அடுத்த போட்டியில் நிச்சயம் விளையாடியே ஆக வேண்டும். ஏனெனில் இந்திய அணிக்கு அடுத்த போட்டி வெற்றி பெற்றே ஆக வேண்டிய போட்டியாக மாறியுள்ளது.

- Advertisement -

எனவே பும்ரா போன்ற ஒரு திறமையான பந்துவீச்சாளர் இடம்பெறுவது அவசியம். அதுமட்டுமின்றி இங்கிலாந்தில் உள்ள மைதானங்களிலேயே இந்த மைதானத்தில் தான் கூடுதல் வேகமும், பவுன்சும் இருக்கும் எனவே அவரை அணியில் விளையாட வைக்க வேண்டும் என்று மான்டி பனேசர் கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : அர்ஷ்தீப் சிங்கை இந்த டெஸ்ட் தொடரில் விளையாட வைக்காதது எனக்கு ஆச்சரியம் அளிக்கிறது.

இதையும் படிங்க : இன்னும் 40 ரன்கள் தான்.. ரோஹித் சர்மாவின் மாபெரும் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் – ரிஷப் பண்ட்

ஏனெனில் இடது கை வேகப்பந்து வீச்சாளரான அவரால் ஸ்விங் செய்து பந்துகளை வீச முடியும். அதேபோன்று அவர் அணியில் இடம்பெற்றால் பந்துவீச்சு யூனிட்டில் வெரைட்டியையும் காண்பிக்க முடியும். அவரை நான் இந்த டெஸ்ட் தொடரில் மிகவும் எதிர்பார்த்தேன். ஆனால் அவரை இதுவரை விளையாட வைக்காதது ஆச்சரியம் அளிப்பதாகவும் மான்டி பனேசர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement