பஞ்சாப் பவுலர்களை ஒன்னும் செய்ய முடியல.. அவங்கள மட்டும் பிளான் பண்ணி அடிச்சேன்.. நித்திஷ் பேட்டி

Nitish Reddy
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் ஒன்பதாம் தேதி நடைபெற்ற 23வது லீக் போட்டியில் பஞ்சாப்பை 2 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் தோற்கடித்தது. முல்லான்பூரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் 20 ஓவரில் 182/9 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக நித்திஷ் ரெட்டி 64 (37), அப்துல் சமட் 25 (12) ரன்கள் எடுத்த நிலையில் பஞ்சாப் சார்பில் அதிகபட்சமாக அர்ஷிதீப் சிங் 4 விக்கெட்டுகள் சாய்த்தார்.

அதைத் தொடர்ந்து 183 ரன்களை துரத்திய பஞ்சாப்புக்கு கேப்டன் ஷிகர் தவான் 14, ஜானி பேர்ஸ்டோ 0, ப்ரப்சிம்ரன் சிங் 4, சாம் கரண் 29, சிக்கந்தர் ராசா 28, ஜித்தேஷ் சர்மா 19 என முக்கிய வீரர்கள் குறைந்த ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் பஞ்சாப் வெற்றி கேள்விக்குறியான போது கடைசி நேரத்தில் சசாங் சிங் அதிரடியாக 46* (25), அசுடோஸ் சர்மா 33* (15) ரன்கள் அடித்துப் போராடினர்.

- Advertisement -

ஆல் ரவுண்ட் நாயகன்:
குறிப்பாக ஜெய்தேவ் உனட்கட் வீசிய கடைசி ஓவரில் 29 ரன்கள் தேவைப்பட்ட போது இந்த ஜோடி 26 ரன்கள் அடித்துப் போராடியது. இருப்பினும் 20 ஓவரில் பஞ்சாப்பை 180/6 ரன்களுக்கு கட்டுப்படுத்தி வென்ற ஹைதராபாத் சார்பில் அதிகபட்சமாக புவனேஸ்வர் குமார் 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

இந்த வெற்றிக்கு 64 ரன்களை அடித்து 3 ஓவர்கள் வீசி 1 விக்கெட் எடுத்து 1 கேட்ச்சும் பிடித்து ஆல் ரவுண்டராக முக்கிய பங்காற்றிய 20 வயதாகும் இளம் வீரர் நித்திஷ் ரெட்டி ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் வேகப்பந்து வீச்சாளர்கள் நன்றாக பந்து வீசியதால் அவர்களை விட்டுவிட்டு ஸ்பின்னர்களை அடித்து நொறுக்க முயற்சித்ததாக நிதிஷ் ரெட்டி கூறியுள்ளார்.

- Advertisement -

அத்துடன் தொடர்ந்து ஆல் ரவுண்டராக அசத்த விரும்புவதாக தெரிவித்த அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “என்னைப் பொறுத்த வரை இது என்னுடைய அணிக்கும் எனக்கும் மிகப்பெரிய பங்களிப்பாகும். அணிக்காக அசத்துவதற்கு என்னை நான் நம்ப வேண்டும் என்று எனக்குள் சொல்லிக் கொண்டிருந்தேன். வேகப்பந்து வீச்சாளர்கள் நன்றாக பந்து வீசினார்கள். எனவே அவர்களை அடிக்க நான் விரும்பவில்லை”

இதையும் படிங்க: 20/3 என திணறிய பஞ்சாப்.. ஹைதெராபாத்துக்கு பயத்தை காட்டிய இளம் ஜோடி.. நூலிலையில் வெற்றி மாறியது எப்படி?

“ஸ்பின்னர்கள் வருவார்கள் என்று எனக்கு தெரியும். நான் அவர்களை நொறுக்க விரும்பினேன். போட்டி முழுவதும் வேகபந்து வீச்சாளார்கள் ஸ்லோயர் பவுன்சர்களை வீசினார்கள் அது வேலை செய்தது. நானும் மைதானத்தின் பரிணாமங்களை பயன்படுத்தினேன். என்னுடைய அணிக்காக இதே போல தொடர்ந்து செயல்பட விரும்புகிறேன்” என்று கூறினார்.

Advertisement