
சொந்த மண்ணில் நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரை கைப்பற்றிய இந்திய அணியானது அடுத்ததாக அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெறவுள்ள டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த சுற்றுப்பயணத்தில் முதலாவதாக ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய டி20 அணி அயர்லாந்து நாட்டிற்கு சென்றடைந்து அங்கு நடைபெறவுள்ள 2 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது.
இந்த தொடருக்கான இந்திய டி20 அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வேளையில் சென்னையிலிருந்து இந்திய வீரர்கள் அனைவரும் அயர்லாந்து நாட்டிற்கு விமானம் மூலம் சென்றுள்ளனர். இவ்வேளையில் இந்த அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான தொடரில் இருந்து நட்சத்திர வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான நிதீஷ் ரெட்டி விலகுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஏற்கனவே இந்த தொடர்களுக்கான இந்திய அணியில் இடம் பெற்றிருந்த மற்றொரு வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ஹார்டிக் பாண்டியா காயம் காரணமாக இடம்பெற முடியாமல் வெளியேறிய நிலையில் அவருக்கு மாற்று வீரராக இடம் பிடித்திருந்த நிதீஷ் ரெட்டியும் இந்திய அணியிலிருந்து விலகியிருப்பது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இப்படி நிதீஷ் ரெட்டி கடைசி நேரத்தில் விலக காரணம் யாதெனில் : ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த ஒருநாள் தொடரின் போது தொடைப்பகுதியில் காயமடைந்த நிதீஷ் ரெட்டிக்கு எடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவரது தொடைப்பகுதியில் வீக்கமும், தசைநார் கிழிவும் ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டது.
இதையும் படிங்க : டெஸ்ட் போட்டிகளுக்கு நான் கம்பேக் தரேனா? நோ சேன்ஸ்.. மில்லியன் டாலர் கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்த – கிங் கோலி
இதன் காரணமாக அவரால் அடுத்த நான்கு வாரங்களுக்கு எவ்வித போட்டிகளிலும் விளையாட முடியாது என்பதனால் இந்த இரண்டு தொடர்களுக்கான இந்திய அணியில் இருந்தும் நிதீஷ்குமார் ரெட்டி விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் அவருக்கு பதிலாக சூரியன்ஷ் ஷெட்கே மாற்று வீரராக இடம் பிடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.