
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியானது அக்டோபர் 19-ஆம் தேதியான இன்று பெர்த் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மிட்சல் மார்ஷ் தங்களது அணி முதலில் பந்துவீசும் என்று அறிவித்தார். அதனை தொடர்ந்து தற்போது இந்திய அணியானது முதலில் விளையாடி வருகிறது.
இந்த போட்டியின் போது இந்திய அணி சார்பாக வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான நிதீஷ் ரெட்டி சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அறிமுகமானார். இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ஹார்டிக் பாண்டியா அண்மையில் காயம் அடைந்து இந்த ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரை தவறவிட்டதால் நிதீஷ் ரெட்டிக்கு ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது.
இந்த போட்டியில் பெர்த் மைதானத்தில் அறிமுகமானதின் மூலம் நிதீஷ் ரெட்டி ஒரு சிறப்பான சாதனை ஒன்றினையும் நிகழ்த்தியுள்ளார். அந்த சாதனை யாதெனில் : கடந்த ஆண்டு நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் போது நிதீஷ் ரெட்டி இதே பெர்த் மைதானத்தில் தான் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக அறிமுகமானார்.
அதற்கடுத்து தற்போது அதே பெர்த் மைதானத்தில் ஒரு ஆண்டு கழித்து ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்காக அறிமுகமாகியுள்ளார். இப்படி சர்வதேச போட்டிகளில் ஒரே மைதானத்தில் அதுவும் வெளிநாட்டு மைதானத்தில் அறிமுகமாகி நிதீஷ் ரெட்டி சாதனை நிகழ்த்தியுள்ளார்.
ஏற்கனவே இந்திய அணிக்காக 9 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 4 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் தற்போது ஒருநாள் போட்டிகளிலும் அறிமுகமாகி 3 வகையான இந்திய அணியிலும் அறிமுகமான வீரராகவும் மாறியுள்ளார். வெளிநாட்டு ஆடுகளங்களை பொறுத்தவரை இந்திய அணி வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்களுடன் விளையாடுவது தான் சரி.
இதையும் படிங்க : வாழ்நாளில் முதல் முறையாக 8 பந்தில் டக்.. ஆஸியில் முடிவுக்கு வந்த கிங் கோலியின் உலக சாதனை
அந்தவகையில் டெஸ்ட் போட்டிகளில் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக விளையாடி வரும் நிதீஷ் ரெட்டி தற்போது ஒருநாள் போட்டிகளிலும் அறிமுகமாகியுள்ளது ரசிகர்கள் மத்தியிலும் வரவேற்பினை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.