DC vs KKR : பிட்ச் பத்தி தெரியாம நாங்க பண்ண இந்த தப்புதான் தோல்விக்கு காரணம் – நிதீஷ் ராணா ஓபன்டாக்

Nithish-Rana
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 28-வது லீக் போட்டியானது நேற்று இரவு டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் நிதீஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற டெல்லி அணியானது தங்களது அணி முதலில் பந்துவீசும் என்று அறிவித்தது.

DC vs KKR

- Advertisement -

அதன்படி முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணியானது டெல்லி அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 20 ஓவர்களின் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 127 ரன்கள் மட்டுமே குவித்தது. பின்னர் 128 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியானது விரைவில் அவர்களை வீழ்த்தி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இவ்வேளையில் மைதானத்தின் தன்மை காரணமாக அவர்களும் போராடியே இறுதியில் 19.2 இரண்டு ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 128 ரன்கள் குவித்து நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியில் தாங்கள் பெற்ற தோல்வி குறித்து பேசிய கொல்கத்தா அணியின் கேப்டன் நிதீஷ் ராணா கூறுகையில் பல்வேறு விடயங்களை பகிர்ந்து கொண்டார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் :

Axar Patel

நாங்கள் இந்த போட்டியில் 15 முதல் 20 ரன்கள் வரை குறைவாக எடுத்து விட்டோம். இந்த மைதானத்தில் பேட்டிங் செய்ய சற்று கடினமாகவே இருந்தது. இந்த தோல்விக்கு முழுவதுமாக நானே பொறுப்பேற்றுக் கொள்கிறேன். ஏனெனில் நாங்கள் இந்த மைதானத்தில் போதுமான அளவு ரன்களை குவித்திருக்க வேண்டும். ஆனால் நாங்கள் போதுமான அளவு ரன் குவிக்க முடியாமல் நாங்கள் தவறினை செய்து விட்டோம்.

- Advertisement -

இருந்தாலும் எங்களது பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக பந்து வீசினர். இந்த ஒரு சிறப்பான பந்துவீச்சு இனிவரும் போட்டிகளில் எங்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும். இந்த போட்டியில் நாங்கள் அவர்களது வெற்றி தாமதப்படுத்த வேண்டும் என்று மட்டுமே நினைத்தோம். அந்த வகையில் அவர்கள் சிறப்பாக விளையாடியும் நாங்கள் அவர்களை இறுதிவரை கொண்டு சென்றோம்.

இதையும் படிங்க : RCB vs PBKS : இனிமே நான் வெறும் பாஸ்ட் பவுலர் மட்டுமில்ல. ஆட்டநாயகன் விருது பெற்ற முகமது சிராஜ் – பேசியது என்ன?

ஒரு அணியாக இந்த போட்டியில் நாங்கள் சிறப்பாகவே செயல்பட்டுள்ளோம். அதிலும் குறிப்பாக இன்றைய போட்டியில் நாங்கள் பந்துவீசிய விதம் மிகவும் திருப்தி அளிக்கிறது. நாங்கள் இன்னும் கூடுதலாக ரன்களை குவித்து இருந்தால் இந்த போட்டி இன்னும் பலமான போட்டியாக மாறியிருக்கும் என நிதீஷ் ராணா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement