CSK vs KKR : இந்த ஒரு விஷயத்தை நெனச்சா என்னால ஜீரனிக்க முடியல. தோல்விக்கு பிறகு – நிதீஷ் ராணா பேட்டி

Nithish-Rana
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 33-வது லீக் ஆட்டம் நேற்று இரவு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் நிதீஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. அதன்படி இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணியின் கேப்டன் நிதீஷ் ராணா தங்களது அணி முதலில் பந்துவீசும் என்று அறிவித்தார்.

CSK vs KKR

- Advertisement -

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய சென்னை அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 235 ரன்கள் குவித்தது. சென்னை அணி சார்பாக துவக்க வீரர் டேவான் கான்வே 56 ரன்களையும், ரகானே 71 ரன்களையும், சிவம் துபே 50 ரன்களையும் குவித்து அசத்தினர். சென்னை அணியின் இந்த அதிரடியான ஆட்டம் அனைவரது மத்தியிலும் பாராட்டினை பெற்றது.

பின்னர் 236 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய கொல்கத்தா அணியானது 20 ஓவர்களின் முடிவில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் மட்டுமே குவித்ததால் 49 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியிடம் தோல்வியை சந்தித்தது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய ரஹானே ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

Nitish Rana

இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த தோல்வி குறித்து பேசிய கொல்கத்தா அணியின் கேப்டன் நிதீஷ் ராணா கூறுகையில் : இந்த தோல்வியை எங்களால் ஜீரணிக்கவே முடியவில்லை. எப்பொழுதுமே 236 ரன்கள் என்கிற பெரிய இலக்கினை துரத்தும் போது சேசிங் சிக்கலாகவே இருக்கும்.

- Advertisement -

அதிலும் குறிப்பாக பவர்பிளேவில் போதுமான அளவு ரன்களை குவிக்கவில்லை என்றால் இது போன்ற போட்டிகள் மேலும் கடுமையாக இருக்கும். அந்த வகையில் இந்த போட்டியில் நாங்கள் பேட்டிங் செய்ய ஆரம்பிக்கும் போதே மிகப்பெரிய இலக்கை துரத்தும் அழுத்தம் இருந்ததால் அவ்வப்போது விக்கெட் விழுந்து எங்களால் இலக்கையும் எட்ட முடியாமல் போய்விட்டது. சென்னை அணி சார்பாக ரஹானே மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இதையும் படிங்க : RCB vs RR : இந்த ஒரு ரூல்ஸ் வந்ததால எல்லா மேட்ச்யும் க்ளோசா போயி முடியுது – வெற்றிக்கு பிறகு கேப்டன் கோலி பேட்டி

எதிரணி இதுபோன்ற பெரிய ஸ்கோரை அடிக்கும்போது அதை ஏற்றுக்கொள்வது கடினமாக இருக்கும். இருந்தாலும் இந்த போட்டியில் இருந்து சில பாசிட்டிவ்வான விடயங்களை எடுத்துக்கொண்டு நாங்கள் இனிவரும் போட்டிகளில் அந்த விடயங்களில் முன்னேற்றத்தை காண விரும்புகிறோம். ஆனால் மீண்டும் மீண்டும் அதே தவறு இது போன்ற பெரிய அணிகளுக்கு எதிராக நடந்தால் நிச்சயம் தோல்வியை தான் சந்திக்க நேரிடும் என நிதீஷ் ராணா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement