கங்குலி அவுட் ஆவதை டிவி யில் பார்த்தால் மணிக்கணக்கில் அழுவேன் – சிறுவயது அனுபவத்தை பகிர்ந்த கொல்கத்தா வீரர்

Ganguly
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியை பொறுத்தவரை சச்சின் டெண்டுல்கர் தான் இதுவரை ரசிகர்களை அதிகம் கொண்ட கிரேட் பேட்ஸ்மேன். ஆனால் அவருக்கு இணையாக தற்போது தோனி கோலி ஆகியோருக்கு பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது. ஆனால் இவர்கள் எல்லாம் தாண்டி சச்சின் விளையாடிய காலகட்டத்தில் அந்த நேரத்தில் மறக்க முடியாத ஒரு பேட்ஸ்மேன் ஏனெனில் அவர்தான் கங்குலி.

Ganguly-1

- Advertisement -

கங்குலிக்கு என அன்றைக்கும் சரி, இன்றைக்கும் சரி, என்றைக்குமே சரி தனி ரசிகர்கள் பட்டாளம் வெறித்தனமாக இருக்கின்றனர் என்றால் அது மிகையல்ல. கங்குலி ஒரு பேட்ஸ்மென் என்பதை கடந்து அவரது கேப்டன்சி காலத்தில் அவரது ஆக்ரோஷமான செயல்பாடு அனைத்திற்கும் தீவிரமான ரசிகர்கள் பட்டாளத்தை அவர் பெற்றுள்ளார்.

மேலும் அவர் பேட்டிங் செய்யும்போது ஸ்பின் பவுலர் பந்து வீசும்போது இரண்டு அடி கீழே வந்து அடிக்கும் சிக்ஸருக்கு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது என்றே கூறலாம். அந்த வகையில் கங்குலியின் வெறித்தனமான ரசிகர்கள் ஒருவர்தான் கொல்கத்தா அணியின் இளம் வீரரான நித்திஷ் ரானா. அவர் கங்குலி குறித்து தற்போது தனது நெகிழ்ச்சியான கருத்துக்களை கூறியுள்ளார்.

NitishRana

அதில் அவர் கூறியதாவது : சிறுவயது முதல் கிரிக்கெட்டை பார்க்கும் போது கங்குலியின் தீவிர ரசிகராக மாறிவிட்டேன். மேலும் நாங்கள் குடும்பத்துடன் அமர்ந்து கிரிக்கெட் போட்டிகளை பார்ப்பது வழக்கம். அப்போது எனது சகோதரர் ராகுல் டிராவிட் ரசிகர், என் தந்தை சச்சின் டெண்டுல்கரின் ரசிகர்.

- Advertisement -

ஆனால் நான் கங்குலியின் ரசிகர் எப்போதெல்லாம் கங்குலி அவுட் ஆகி போகிறாரோ அப்போதெல்லாம் என் தந்தை ஏதாவது சொல்வார். அதனை தாங்கிக் கொள்ள முடியாமல் நான் தனி அறைக்கு சென்று கதவை மூடிக்கொண்டு மணிக்கணக்கில் அழுவேன் என்று தெரிவித்துள்ளார் நித்திஷ் ரானா.

Nitish-Rana

கங்குலியை போலவே அவரும் இடதுகை பேட்ஸ்மேன் என்பதால் அவர் மீது ஈர்ப்பு அதிகமாக இருக்கிறதாம். மேலும் தற்போது ஐபிஎல் போட்டிகளில் அவர் கொல்கத்தா அணிக்காக சிறப்பாக விளையாடி வருகிறார். இருப்பினும் இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை இருந்தாலும் விரைவில் அவர் இந்திய அணியில் இடம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement