KKR vs SRH : எல்லா மேட்ச்சையும் அவர் ஜெயிச்சி குடுப்பாருன்னு நீங்க நெனைக்குறது தப்பு. தோல்விக்கு பிறகு – நிதீஷ் ராணா பேட்டி

Nithish-Rana
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 19-ஆவது லீக் போட்டியானது நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் நிதீஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா அணியும், எய்டன் மார்க்ரம் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ராணா தங்களது அணி முதலில் பந்துவீசும் என்று அறிவித்தார். அதன்படி முதலில் விளையாடிய சன் ரைசர்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் நான்கு விக்கெட்டை இழந்து 228 ரன்களை குவித்தது.

KKR vs SRH

- Advertisement -

அந்த அணி சார்பாக அதிகபட்சமாக துவக்க வீரர் ஹாரி ப்ரூக் 100 ரன்களையும், கேப்டன் மார்க்ரம் 50 ரன்களையும் குவித்து அசத்தினர். பின்னர் 229 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய கொல்கத்தா அணியானது துவக்கத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. குறிப்பாக 20 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்த வேளையில் நாராயணன் ஜெகதீசன் மற்றும் நித்திஷ் ராணா ஆகியோர் நான்காவது விக்கெட்டிற்கு மிகச்சிறப்பாக விளையாடிய 62 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

பின்னர் அதிரடி காட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஆண்ட்ரே ரசலும் மூன்று ரன்களில் ஆட்டமிழக்க இந்த போட்டியில் கொல்கத்தா அணி எளிதில் வீழ்ந்துவிடும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அந்த நேரத்தில் ஜோடி சேர்ந்த நிதீஷ் ராணா மற்றும் ரிங்கு சிங் ஜோடி மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 69 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. இறுதியில் எவ்வளவோ போராடியும் கொல்கத்தா அணி 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 205 ரன்களை மட்டுமே குவித்தது.

Rinku Singh

கொல்கத்தா அணி சார்பாக அதிகபட்சமாக நித்திஷ் ராணா 75 ரன்களும், ரிங்கு சிங் 58 ரன்களையும் அடித்தனர். இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய கொல்கத்தா அணியின் கேப்டன் நித்திஷ் ராணா கூறுகையில் : இந்த சேசிங் கிட்டத்தட்ட இறுதிவரை சென்றதில் மகிழ்ச்சி. எங்களது பந்துவீச்சாளர்கள் இந்த போட்டியில் திட்டமிட்டபடி பந்து வீசவில்லை.

- Advertisement -

இந்த மைதானத்தில் 229 ரன்கள் அடிப்பது கடினம். இந்த மைதானத்தில் பேட்டிங் எளிது என்றாலும் இந்த இலக்கு நிச்சயம் பெரிய ஒன்றுதான். குஜராத் அணிக்கு எதிராக ரிங்கு சிங் விளையாடிய மேட்ச் வின்னிங் உண்மைதான். அது மற்றொரு நாளும் நடக்கலாம். ஆனால் எல்லா நாளும் எல்லா போட்டிகளிலும் அவரே அடிப்பார் என்று எதிர்பார்ப்பது தவறு. இருந்தாலும் இந்த போட்டியில் அவர் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இதையும் படிங்க : வீடியோ : ஹாட்ரிக் எடுத்து போராடிய ஹென்றி, வேகத்தில் மிரட்டிய பாக் – தோனியின் ஆல் டைம் சாதனையை செய்த பாபர் அசாம்

எங்களது அணி பேட்ஸ்மேன்கள் இன்னும் கூடுதல் முயற்சித்து இருந்தால் போட்டியில் வெற்றி பெற்றிருக்க முடியும். இந்த மைதானத்தில் 200 ரன்கள் என்பது சராசரியான ரன்கள்தான். அதற்கு மேல் விட்டுக்கொடுத்த ரன்கள் தான் நாங்கள் இந்த போட்டியில் தோல்வியடைய காரணம் என நிதீஷ் ராணா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement