
இங்கிலாந்து மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அந்தத் தொடரில் சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி இங்கிலாந்து மண்ணில் விளையாட உள்ளது. இம்முறை ரோஹித் சர்மா, விராட் கோலி, அஸ்வின் போன்ற சீனியர் வீரர்கள் ஓய்வு காரணமாக விளையாடப் போவதில்லை.
எனவே இளம் இந்திய அணி சவாலான இங்கிலாந்து மண்ணில் எப்படி செயல்படப் போகிறது? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது. இந்நிலையில் ரோஹித் சர்மா, விராட் கோலி இல்லாத இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் கண்டிப்பாக இங்கிலாந்து தொடரில் விளையாட வேண்டும் என்று அந்நாட்டின் முன்னாள் வீரர் தெரிவித்துள்ளார். ஆனால் அவரைத் தேர்வு செய்யாமல் இந்தியா ட்ரிக்கை தவற விட்டுள்ளதாகவும் நைட் கூறியுள்ளார்.
அதே சமயம் தமிழக வீரர் சாய் சுதர்சன் தம்முடைய கண்ணுக்கு அடியில் பந்தை பார்த்து தாமதமாக விளையாடுவதைப் போன்ற நிறைய திறமைகளைக் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அதனால் இங்கிலாந்து மண்ணில் கண்டிப்பாக சுதர்சன் அசத்துவார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி நிக் நைட் பேசியது பின்வருமாறு. “இதுவே ரோஹித், விராட் ஆகியோரின் இழப்பை இந்தியா சமாளிப்பதற்கு கிடைத்துள்ள சிறந்த வாய்ப்பாகும்”
“இங்கே நான் மிகவும் நேர்மையாக பேசப் போகிறேன். இங்கே ஸ்ரேயாஸ் ஐயர் கண்டிப்பாக இருந்திருக்க வேண்டும். அது இந்திய அணி அடுத்த தலைமுறையை நோக்கி நகரும் சூழ்நிலைகளை சமாளிக்க உதவும். அதே சமயம் இந்திய அணியில் நிறைய திறமையான வீரர்கள் உள்ளார்கள். என்னைப் பொறுத்த வரை 3, 4வது இடங்களில் சாய் சுதர்சன், சுப்மன் கில் விளையாட வேண்டும்”
“சுதர்சன் மிகவும் நல்ல பிளேயர். அவர் பந்தை தாமதமாக விளையாடுவார் என்ற வார்த்தைகளை இத்தொடரின் போது நீங்கள் அதிகமாக கேட்க முடியும். ஏனெனில் அவர் பந்தை தம்முடைய கண்களுக்கு கீழே பார்த்து விளையாடுவார். அவர் முன்னோக்கி சென்று அல்லாமல் பந்தை தம்முடைய முன்னங்காலில் விளையாடுவார். பந்தை கொஞ்சம் பின்பற்றி விளையாடுவார்”
இதையும் படிங்க: துளியும் சுயநலமின்றி இந்திய அணிக்காக பும்ரா செய்த செயல்.. பெரிய மனுஷன்யா இவரு – விவரம் இதோ
“அவர் லைனை முன்னதாகவே பிடித்து விளையாடுவார். லைனை பின்பற்றி விளையாட மாட்டார். ஏனெனில் அங்கே பந்துகள் கொஞ்சம் தாமதமாக நகரலாம். இது போன்ற விஷயங்கள் தான் இங்கிலாந்தில் வெற்றிகரமாக செயல்படுவதற்கான சாவியாகும். அதை சாய் சுதர்சன் கொண்டுள்ளார்” என்று கூறினார். இதைத்தொடர்ந்து முதல் போட்டி ஜூன் 20ஆம் தேதி லீட்ஸ் நகரில் துவங்குகிறது.