ஹார்டிக் பாண்டியாவின் தற்போதைய உடல்நிலை இதுதான் – இந்திய பிசியோதெரபிஸ்ட் ஓபன் டாக்

- Advertisement -

ஹர்திக் பாண்டியா உலக கோப்பை தொடருக்கு பின்னர் இந்திய அணியில் பெரிதாக ஆடவில்லை. அதன்பின்னர் ஒரு சர்ச்சையில் சிக்கினார். சர்ச்சைக்கு பிறகு அவருக்கு காயம் ஏற்பட்டது. அதன் காரணமாக தற்போது வரை இந்திய அணிக்கு அவர் திரும்பவே இல்லை. லண்டன் சென்று தனது காயத்திற்கு அறுவைசிகிச்சை செய்துகொண்ட பாண்டியா மீண்டும் உள்ளூர் டி20 போட்டியில் பங்கேற்றார்.

Pandya

- Advertisement -

அந்த லீக் போட்டியில் தனது அதிரடியின் மூலம் அடுத்தடுத்த அதிவேக சதம் அடித்த பாண்டியா மீண்டும் தன் வருகையை இந்திய அணிக்கு பலமாக அறிவித்தார். அதனால் மீண்டும் தனது இடத்தினை இடத்திற்காக அவர் காத்திருந்தார். அடுத்து ஐ.பி.எல் தொடரில் தனது அதிரடியை காட்ட இருந்த அவர் கொரோனா வைரஸினால் வீட்டில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

மேலும் ஏற்கனவே தொடர் காயத்திற்கு பிறகு தற்போது உடல்நலம் தேறிய அவர் மீண்டும் தனது உடற்பயிற்சிகளில் கவனத்தை செலுத்தி வருகிறார். மேலும் பெங்களுருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடெமியிலும் பயிற்சியில் ஈடுபட்டார். அவரது உடல் அமைப்பை கண்காணிக்க இந்திய அணியின் பிஸியோ ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Pandya

சமீபத்தில் இந்திய அணியின் பிஸியோவாக இருக்கும் நிக் வெப் இது குறித்து பேசியுள்ளார். ஹர்திக் பாண்டியாவின் உடல் அமைப்பு தற்போது நல்ல நிலையில் உள்ளது. மிகக் கடினமாக பயிற்சி செய்து வருகிறார். மன அழுத்தம் காரணமாக அவருக்கு ஏற்பட்டிருக்கும் காயத்தில் இருந்து வெளிவருவது சற்று கடினம்.

- Advertisement -

இவர் மீண்டும் பந்துவீச துவங்கிவிட்டால் அவருக்கு ஏற்ப ஆட்டத்தின் திட்டத்தை மாற்றிக்கொள்ளலாம். ஹர்திக் பாண்டியா இந்தியாவின் முக்கியமான வீரர். அவர் உடல் தகுதி தற்போது நல்ல நிலையில் உள்ளது என கூறியுள்ளார்.ஹர்திக் பாண்டியா இந்திய அணிக்காக கடைசியாக கடந்த ஆகஸ்ட் மாதம் விளையாடினார்.

Pandya-1

தற்போதுவரை 54 ஒரு நாள் போட்டிகள், 49 டி20 போட்டிகள் மற்றும் 11 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார். அவர் முக்கியமான நேரத்தில் களமிறங்கி அதிரடியாக ஆடி இந்திய அணியை வெற்றிக்கு பலமுறை அழைத்துச் சென்றுள்ளார் .அடுத்த முறை இந்திய அணி கிரிக்கெட் போட்டியில் களமிறங்கும் போது இவருக்கும் அந்த அணியில் இவர் இருப்பார் என்று நம்புவோம்.

இந்திய வீரர்கள் தொடர்ந்து காயத்தில் சிக்கி வருகின்றனர். புவனேஷ்வர் குமார், ஷமி, இஷாந்த் மற்றும் தவான் என பலரும் அவ்வப்போது காயத்தில் சிக்கி வருகின்றனர். அதேபோன்று வீரர்களின் காயத்தை போக்குவதற்காக மையத்தை இந்தியாவில் ஆங்காங்கே வைக்குமாறு முன்னாள் வீரர்கள் பலரும் கூறிவருகின்றனர்.

Advertisement