நெனச்சாவே எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. எல்லாருமே அப்செட்டா தான் இருக்காங்க – நிக்கோலஸ் பூரான் வருத்தம்

Pooran
- Advertisement -

டி20 உலக கோப்பை வரலாற்றில் இரண்டு முறை சாம்பியன் பட்டத்தை வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியானது இம்முறை மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று முடிந்த தகுதி சுற்று போட்டிகளின் முடிவிலேயே ஸ்காட்லாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையே தோல்வியை சந்தித்த வெஸ்ட் இண்டீஸ் அணியானது முதல் சுற்றுடன் இந்த டி20 உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறியது.

Jason Holder WI vs SCotland

- Advertisement -

டி20 கிரிக்கெட்டில் மிகப்பெரிய பலம் வாய்ந்த அணியாக பார்க்கப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் அணி இப்படி சிறிய அணிகளுடன் தோல்வியை சந்தித்து முதல் சுற்று உடன் வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த மோசமான தோல்விகளின் காரணமாக அந்த அணியின் பயிற்சியாளர் பில் சிமென்ஸ் அந்த பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளார்.

அந்த வகையில் எதிர்வரும் நவம்பர் – டிசம்பரில் ஆஸ்திரேலியாவில் சென்று இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் அந்த தொடரோடு அவர் ஓய்வு பெறுவார் என்று வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி அடைந்த தோல்வி குறித்து பேசிய நிக்கலஸ் பூரான் தனது நிலைப்பாடு குறித்தும் தெளிவான விளக்கத்தை அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : அணியின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பது எங்களுக்கு தெரியவில்லை. ஆனால் எங்களது அணியில் உள்ள அனைவருக்கும் இது நல்ல பாடமாக அமைந்தது.

- Advertisement -

IND vs WI T20I

அடுத்தடுத்து என்ன நடக்கும் என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும். அதே வேளையில் நாங்கள் ஒவ்வொருவரும் எங்களுடைய திறமையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று முடிவு எடுத்துள்ளோம். இப்போது மனதுக்குள் மிகுந்த வேதனையுடன் உள்ளோம். அணியில் உள்ள ஒவ்வொரு வீரருமே தற்போது மிகவும் மன வேதனையுடன் இருக்கின்றனர்.

கேப்டன் பதவி குறித்து நான் கடந்த சில மாதங்களாகவே யோசித்து வருகிறேன். கிரிக்கெட் விளையாடுவது மட்டும் தான் என்னுடைய கனவு. இதற்கு முன்னர் மிகப்பெரிய சரிவுகளை சந்தித்துள்ளேன். இப்போதும் அதே போன்ற ஒரு சரிவனை சந்தித்துள்ளேன். இருந்தாலும் எனக்கு சவால்களை எதிர்கொள்வதில் மிகவும் ஆர்வம் அதிகம்.

இதையும் படிங்க : சதமடித்து காப்பாற்றிய நியூசிலாந்து வீரர் சாதனை – மிரட்டிய ஆசிய சாம்பியனின் கதையை முடித்தது எப்படி

அந்த வகையில் எதிர்வரும் போட்டிகளில் விளையாட நான் இந்த தோல்வியில் இருந்து பாடங்களை கற்றுக்கொண்டு இன்னும் பலமாக திரும்ப முயற்சிப்பேன் என நிக்கோலஸ் பூரான் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement