சஞ்சீவ் கோயங்கா நல்ல மனுஷன்.. அவர் எங்களை டிஸ்டர்ப் பண்ணவே மாட்டார் – நிக்கோலஸ் பூரான் சப்போர்ட்

Pooran and Goenka
- Advertisement -

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் உரிமையாளரான சஞ்சீவ் கோயங்கா கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் போது அந்த அணியின் கேப்டன் கே.எல் ராகுலை மைதானத்தில் வைத்தே கடுமையாக திட்டியிருந்த சம்பவம் அப்போது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அதோடு லக்னோ அணியின் உரிமையாளர் செய்த இந்த செயலால் அதிருப்தி அடைந்த கே.எல் ராகுல் அந்த அணியில் இருந்து வெளியேறி தற்போது டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

சஞ்சீவ் கோயங்கா தங்கமான மனுஷன் : நிக்கோலஸ் பூரான்

அதேவேளையில் லக்னோ அணிக்காக அதிக தொகைக்கு வாங்கப்பட்ட ரிஷப் பண்ட் தற்போது லக்னோ அணியை வழிநடத்தி வருகிறார். இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் 2025 ஐபிஎல் தொடரில் இதுவரை தாங்கள் விளையாடியுள்ள 9 ஆட்டங்களில் 5 வெற்றிகளை பெற்றுள்ள அந்த அணி புள்ளி பட்டியலில் தற்போது ஆறாவது இடத்தை பிடித்துள்ளது. இன்னும் அந்த அணிக்கு 5 போட்டிகள் எஞ்சியுள்ள வேளையில் பிளே ஆப் சுற்றிற்கான வாய்ப்பு அந்த அணிக்கு தற்போது இருந்து வருகிறது.

- Advertisement -

வழக்கமாகவே களத்தில் வீரர்களுடன் காரசாரமாக விவாதத்தில் ஈடுபடும் சஞ்சீவ் கோயங்கா இம்முறை வீரர்களுடன் பெரியளவில் கலந்துரையாடாமல் இருந்து வருகிறார். ஆனாலும் ரசிகர்கள் மத்தியில் அவர் ஒரு ட்ரோல் மெட்டீரியலாகவே பார்க்கப்பட்டு வருகிறார். இந்நிலையில் பொதுவெளியில் பலர் பார்க்கும் நபர் போன்ற ஒருவர் சஞ்சீவ் கோயங்கா கிடையாது என்றும் அவர் வீரர்களுக்கு நல்ல ஆதரவு கொடுக்கிறார் என்றும் அவருக்கு சப்போர்ட் செய்து லக்னோ அணியின் நட்சத்திர அதிரடி வீரரான நிக்கோலஸ் பூரான் பேசியுள்ளார்.

அவரது பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் பூரான் கூறுகையில் : லக்னோ அணிக்கு ஆதரவளிப்பதில் சஞ்சீவ் கோயங்கா தான் முன்னிலையில் இருப்பார். எப்போதுமே கிரிக்கெட் தொடர்பான விடயங்களை வீரர்களிடம் பேசி முடிவுகளில் ஒருபோதும் தலையிட்டது கிடையாது. லக்னோ அணியில் இதுவரை நான் மிகச் சிறப்பாக இருப்பதாக உணர்கிறேன்.

- Advertisement -

எந்த ஒரு வீரருக்குமே வாய்ப்புகளை வழங்க எங்களது அணியின் நிர்வாகம் தயங்கியது இல்லை அதிலும் குறிப்பாக அணியின் உரிமையாளர் வீரர்களுக்கு மிகவும் ஆதரவாக இருக்கிறார் என சஞ்சீவ் கோயங்கா குறித்து பூரான் பேசியுள்ளார். மேலும் கேப்டன் ரிஷப் பண்ட் பற்றி பேசிய அவர் கூறுகையில் : நாங்கள் இருவருமே ஒரே மாதிரியான விபத்தை சந்தித்து அதிலிருந்து மீண்டு வந்துள்ளோம். எங்களுக்குள் ஆரம்பத்தில் இருந்தே நல்ல நட்பு இருக்கிறது.

இதையும் படிங்க : தல தோனிக்கு மாற்றுவீரர் இவர்தானா? சி.எஸ்.கே அணிக்குள் வரவிருக்கும் 19 வயது விக்கெட் கீப்பர் – யார் இவர்? என்ன ஸ்பெஷல்?

நான் எப்போது இந்தியா வந்தாலும் ரிஷப் பண்ட் உடனடியாக என்னை வந்து சந்திப்பார். அதேபோன்று ரிஷப் பண்ட் எப்போது வெஸ்ட் இண்டீஸ் வந்தாலும் நான் அவரை சந்திப்பேன் நாங்கள் இருவருமே எங்களுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டு அடுத்த கட்டத்திற்கு முன்னேறி வருகிறோம் என பூரான் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement