பொல்லார்ட் இல்லையென்றால் எனது கிரிக்கெட் வாழ்க்கை கேள்விக்குறியாகி இருக்கும் – இளம்வீரர் நெகிழ்ச்சி

Pollard
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்திய அணிக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று முடிந்தது. இந்த தொடரில் இந்திய அணி 2 – 1 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி இந்தியா தொடரை கைப்பற்றியது.

Cup

- Advertisement -

இந்நிலையில் இந்த தொடரில் சிறப்பாக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் நிக்கோலஸ் பூரன் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடரின் போது பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கி 4 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டார். பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கியதால் அவரது கிரிக்கெட் வாழ்க்கை கேள்விக்குறியானது. ஆனால் அதே சமயத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு புதிய கேப்டனாக பொல்லார்ட் நியமிக்கப்பட்டார்.

பொல்லார்ட் அவருக்கு ஆதரவாக இருந்து இந்த தடை முடிந்த பிறகு இந்தியாவுக்கு எதிரான தொடரில் நேரடியாக களம் இறக்கினார். இந்த தொடரில் பூரான் 29, 75 மற்றும் 89 ரன்கள் என அடித்து விளாசினார். இந்நிலையில் இந்த தொடர் குறித்தும், பொல்லார்ட் குறித்தும் பேட்டியளித்த பூரான் கூறுகையில் : பொல்லார்ட் இல்லை என்றால் எனது கிரிக்கெட் வாழ்க்கை கேள்விக்குறியாய் இருக்கும்.

மேலும் பொல்லார்ட் எனக்கு மூத்த சகோதரர் மாதிரி அதேபோல் என் தந்தையைப் போன்றவர். நான் கிரிக்கெட் திரும்பியதில் இருந்தே எனக்கு அவர் ஆதரவாக உள்ளார். என் திறமை மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பு கொடுத்தார். அதனால் அவருக்கு நன்றி சொல்ல வேண்டும். எங்கள் இருவருக்கும் ஒருவரைப்பற்றி ஒருவருக்கு நன்றாக தெரியும். மைதானம் மட்டுமின்றி, வெளியேயும் நாங்க சிறந்த நண்பர்கள் ஆகவே இருந்து வருகிறோம்.

Pooran

பேட்டிங் செய்யும் போது உற்சாகமாக விளையாட வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும் என்றும், என்னுடைய கடினமான காலங்களில் என்னுடன் பொல்லார்ட் இருந்துள்ளார் என்றும் பூரான் நெகிழ்ச்சியுடன் கூறியது குறிப்பிடத்தக்கது. பூரான் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கார் விபத்தில் தனது இரு கால்களையும் பலத்த அடிபட்டு நடக்கவே முடியாது என்று மருத்துவர்கள் கூறிய பின்னர் தனது விடா முயற்சி காரணமாக மீண்டு வந்து தற்போது கிரிக்கெட் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement