பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்ற நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 23-வது லீக் போட்டியில் விளையாடிய ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தியது. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பெங்களூரு அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடி லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியானது :
இந்த தொடர் முழுவதும் தப்பு பண்ணிட்டு வரோம் : நிக்கோலஸ் பூரான்
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 146 ரன்களை மட்டுமே குவித்தது. பின்னர் 147 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆர்.சி.பி அணி 15.1 ஓவரில் 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 149 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் தோல்வியை சந்தித்த லக்னோ அணி இந்த தொடரில் தங்களது மூன்றாவது தோல்வியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் ஏழாவது இடத்திற்கு சென்றுள்ளது.
அதேவேளையில் 5 போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்றுள்ள ஆர்.சி.பி அணி முதலிடத்திற்கு நகர்ந்துள்ளது. இந்நிலையில் நேற்றைய இந்த போட்டியில் அடைந்த தோல்விக்கு பிறகு பேசிய லக்னோ அணியின் ஸ்டேன்டிங் கேப்டன் நிக்கோலஸ் பூரான் கூறுகையில் : உண்மையிலேயே இந்த தொடர் எங்களுக்கு மிகவும் கடினமாக இருந்து வருகிறது. நாங்கள் பேட்டிங்கில் இந்த தொடர் முழுவதுமே மோசமாக விளையாடி வருகிறோம். இந்த போட்டியை பொறுத்தவரை 175 ரன்கள் வரை அடித்திருந்தால் சரியாக இருந்திருக்கும்.
ஆனால் நாங்கள் அதனை செய்ய தவற விட்டோம். தோல்வி குறித்து எந்த ஒரு சீக்ரெட்டும் கிடையாது. நாங்கள் இந்த தொடர் முழுவதுமே பேட்டிங்கில் சிறப்பாக செயல்படவில்லை. டி20 போட்டிகளை பொருத்தவரை பேட்டிங்கில் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட வேண்டும். அதற்காக நாங்கள் உழைத்து வருகிறோம். ஆனாலும் எங்களிடமிருந்து இன்னும் சிறப்பான ஆட்டம் வெளிவரவில்லை.
இதையும் படிங்க : ஒரு கேப்டனா இதைவிட வேற என்ன வேணும்? லக்னோ அணியை வீழ்த்திய பின்னர் – ரஜத் பட்டிதார் ஹேப்பி
நிச்சயம் நானும் என்னுடைய பேட்டிங்கின் மீது நிறைய நம்பிக்கை வைத்துள்ளேன். நிச்சயம் தேவையான நேரத்தில் என்னுடைய பேட்டில் இருந்தும் ரன்கள் வரும். இதுவரை நாங்கள் நினைத்த வழியில் எதுவும் செல்லவில்லை ஆனால் நிச்சயம் இதிலிருந்து மீண்டு வருவோம் என நிக்கோலஸ் பூரான் கூறியது குறிப்பிடத்தக்கது.



