IND vs WI : இதுபோதும் இதுவே நாங்க ஜெயிச்சதுக்கு சமம் தான் – தோல்விக்கு பிறகு பூரான் பேசியது என்ன?

Nicolas-Pooran
- Advertisement -

இங்கிலாந்தில் நடைபெற்று முடிந்த டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடர் ஆகியவற்றை கைப்பற்றிய இந்திய அணியானது அடுத்ததாக தற்போது வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதன்படி இந்த வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி பங்கேற்க இருக்கிறது. இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது ஒருநாள் போட்டி நேற்று டிரினிடாட் நகரில் உள்ள குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.

IND vs WI Shikhar Dhawan Nicholas Pooran

- Advertisement -

இந்த தொடரில் இந்திய அணியின் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் ஷிகர் தவான் தலைமையிலான இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணியே இந்த முதலாவது ஒரு நாள் போட்டியில் விளையாடியது. அதன்படி நேற்றைய முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டிஸ் அணி முதலில் பந்து வீச்சை தீர்மானம் செய்ய முதலில் பேட்டிங்கை விளையாடிய இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 308 ரன்கள் என்கிற மிக சிறப்பான ரன் குவிப்பை வழங்கியது.

இந்திய அணி சார்பாக ஷிகார் தவான் 97 ரன்களையும், கில் 64 ரன்களையும், ஷ்ரேயாஸ் ஐயர் 54 ரன்களையும் குவித்தனர். பின்னர் 309 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது சிறப்பான போராட்டத்தை அளித்து 50 ஓவர்களின் முடிவில் 6 விக்கட்டுகளை இழந்து 305 ரன்கள் குவித்து மூன்று ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பாக கையில் மேயர்ஸ் 75 ரன்களையும், பிரெண்டன் கிங் 54 ரன்களையும் குவித்தனர்.

Siraj

சமீப காலமாகவே ஒருநாள் போட்டிகளில் திணறிவரும் வெஸ்ட் இண்டீஸ் அணியானது இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய வெஸ்ட் இண்டிஸ் அணியின் கேப்டன் நிக்கோலஸ் பூரான் கூறியதாவது : இந்த ஆட்டமே எங்களுக்கு வெற்றி பெற்றது போன்று தான் உள்ளது. ஏனெனில் நாங்கள் சமீபமாகவே நிறைய பேசி வருவது யாதெனில் 50 ஓவர்கள் முழுமையாக விளையாட வேண்டும் என்பது மட்டும்தான்.

- Advertisement -

அந்த வகையில் நாங்கள் 50 ஓவர்களையும் முழுமையாக விளையாடும் அளவிற்கு தகுதியான அணி தான் என்று இந்த போட்டியில் நிரூபித்துள்ளோம். நிச்சயமாக இனிவரும் போட்டிகளில் எங்களுடைய பலத்தை அதிகரித்துக் கொண்டே செல்வோம். இந்த போட்டியில் நாங்கள் தோல்வியை சந்தித்து இருந்தாலும் இனி வரும் இரண்டு போட்டிகளை நாங்கள் நம்பிக்கையுடன் எதிர்கொள்ள காத்திருக்கிறோம். இந்த மைதானத்தில் எங்களது பவுலர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டார்கள். ஆனாலும் பேட்டிங்கிற்கு சாதகமான இந்த மைதானத்தில் நாங்கள் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.

இதையும் படிங்க : IND vs WI : கடைசில எங்களுக்கு பயமா தான் இருந்துச்சி. வெற்றி குறித்து கேப்டன் ஷிகர் தவான் – பேசியது என்ன?

இறுதி வரை போராட்டத்தை அளித்து கடைசியில் தோல்வியை சந்தித்தது சற்று வருத்தமாக இருந்தாலும் சவால்களை எதிர்த்து எங்கள் அணி வீரர்கள் விளையாடிய விதத்தை நினைத்து பெருமை அடைகிறேன். இந்த தோல்வியின் மூலமாக கிடைத்த நல்ல பாசிட்டிவான விஷயங்களை அடுத்த போட்டிக்கு கொண்டு சென்று நிச்சயம் வெற்றி பெற முயற்சிப்போம் என நிக்கோலஸ் பூரான் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement