LSG vs RCB : என்னுடைய இந்த சிறப்பான ஆட்டத்தை அவங்க 2 பேருக்காக டெடிகேட் பண்றேன் – நிக்கோலஸ் பூரன் ஓபன்டாக்

Pooran
- Advertisement -

கே.எல் ராகுல் தலைமையிலான லக்னோ அணிக்கம், டூபிளெஸ்ஸிஸ் தலைமையிலான பெங்களூரு அணிக்கும் இடையேயான 15-ஆவது லீக் போட்டியானது நேற்று பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. சொந்த மைதானத்தில் ரசிகர்களின் ஆரவாரத்திற்கு மத்தியில் விளையாடிய பெங்களூரு அணியானது இந்த போட்டியின் கடைசி பந்தில் லக்னோ அணியிடம் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்து ஏமாற்றத்தை சந்தித்தது. அதே வேளையில் த்ரில் வெற்றியை பெற்ற லக்னோ அணி ரசிகர்கள் மத்தியில் பாராட்டினையும் பெற்றது.

RCB vs LSG

- Advertisement -

அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே.எல் ராகுல் தங்களது அணி முதலில் பந்துவீசும் என்று அறிவித்தார். அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது விராட் கோலி, டூப்ளிசிஸ் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோரது அரைசதம் காரணமாக 20 ஓவர்களின் முடிவில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 212 ரன்கள் குவித்தது. பின்னர் 213 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய லக்னோ அணியானது துவக்கத்திலேயே மூன்று விக்கெட்டுகளை இழந்து சரிவை சந்தித்தது.

இருந்தாலும் லக்னோ அணியின் கேப்டன் ராகுலுடன் ஜோடி சேர்ந்த மார்க்கஸ் ஸ்டோய்னிஸ் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 30 பந்துகளில் 65 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதன் பின்னர் ராகுலும் 18 ரன்களுக்கு ஆட்டம் இழக்க லக்னோ அணியானது 105 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது களமிறங்கிய லக்னோ அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான பூரான் 19 பந்துகளை மட்டுமே சந்தித்து 7 சிக்ஸர் மற்றும் நான்கு பவுண்டரி என 62 ரன்கள் குவித்து போட்டியை அப்படியே தலைகீழாக மாற்றிவிட்டார். வெற்றிக்கு மிக அருகில் கொண்டு வந்து அவர் ஆட்டம் இழந்ததும் லக்னோ அணியினர் ஒவ்வொரு ரன்களாக சேர்த்து இறுதியில் வெற்றியும் பெற்று விட்டனர்.

pooran 1

ஆனால் பூரான் மட்டும் அதிரடி காட்டாமல் இருந்திருந்தால் நிச்சயம் இந்த போட்டியில் லக்னோ தோல்வியை சந்தித்திருக்கும். அதன் காரணமாக அவரது அதிரடியான ஆட்டத்திற்கு பிறகு போட்டியின் ஆட்டநாயகன் விருதும் அவருக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த போட்டியில் தான் அதிரடியாக விளையாடியது குறித்து பேசிய பூரான் கூறுகையில் : என்னுடைய இந்த சிறப்பான ஆட்டத்தை நான் என்னுடைய மனைவி மற்றும் அண்மையில் பிறந்த எனது குழந்தைக்காகவும் டெடிகேட் செய்கிறேன்.

- Advertisement -

இந்த போட்டியில் எங்களால் இலக்கை துரத்த முடியும் என்று நினைத்தோம். ஆரம்பத்தில் விக்கெட்டுகள் விழுந்தாலும் ராகுல் மற்றும் ஸ்டோய்னிஸ் ஆகியோர் நல்ல பாட்னர்ஷிப் அமைத்தனர். ஸ்டோய்னிஸ் காட்டிய அதிரடி எங்களுக்கு முமென்ட்டத்தை கொண்டு வந்தது. அதன் காரணமாக நிச்சயம் கடைசி நான்கு ஓவர்களில் 50 ரன்கள் தேவை என்றால் கூட அடிக்க முடியும் என்ற நம்பிக்கையும் பிறந்தது. நான் களமிறங்கிய இரண்டாவது பந்திலயே சிக்சர் விளாசினேன். அது எனக்கு கூடுதல் நம்பிக்கையும் தந்தது.

இதையும் படிங்க : IPL 2023 : உங்க கண்ணுக்கு அப்டி தெரியுதா? 3 விக்கெட் போயும் நான் கரெக்ட்டா தான் ஆடுனேன் – ரசிகர்களுக்கு கேஎல் ராகுல் பதிலடி என்ன

என்னுடைய ஸ்லாட்டில் பந்து இருந்தால் நிச்சயம் அது எந்த பந்தாக இருந்தாலும் நான் சிக்ஸருக்கு தான் செல்வேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக போட்டிகளை எவ்வாறு பினிஷிங் செய்ய வேண்டும் என்பதை பயிற்சி செய்து வருகிறேன். அந்த வகையில் இந்த போட்டியில் அதிரடியாக ஆடி வெற்றிக்கு அருகில் வந்தாலும் இறுதியில் போட்டியை வெற்றிகரமாக முடித்துக் கொடுக்காததில் வருத்தம் தான். ஆனாலும் எங்களது அணி இறுதியில் வெற்றிக்கொட்டை எட்டியது என பூரன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement