IPL 2023 : உங்க கண்ணுக்கு அப்டி தெரியுதா? 3 விக்கெட் போயும் நான் கரெக்ட்டா தான் ஆடுனேன் – ரசிகர்களுக்கு கேஎல் ராகுல் பதிலடி என்ன

KL Rahul LSG
- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 10ஆம் தேதி நடைபெற்ற 15வது லீக் போட்டியில் பெங்களூருவை 1 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த லக்னோ தங்களுடைய 3வது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியது. சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு விராட் கோலி 61, கேப்டன் டு பிளேஸிஸ் 79*, கிளன் மேக்ஸ்வெல் 59 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் அதிரடியான ரன் குவிப்பால் 20 ஓவர்களில் 212/2 ரன்கள் சேர்த்தது. அதை துரத்திய லக்னோவுக்கு கெய்ல் மேயர்ஸ் 0, தீபக் ஹூடா 9, க்ருனால் பாண்டியா 0 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

அதனால் 23/3 என தடுமாறிய தனது அணியை பொறுப்புடன் காப்பாற்ற வேண்டிய கேப்டன் கேஎல் ராகுல் நிதான பேட்டிங்கை வெளிப்படுத்திய நிலையில் அடுத்து வந்த மார்கஸ் ஸ்டோனிஸ் அதிரடியாக 65 (30) ரன்கள் குவித்து சரிவை சரிசெய்து ஆட்டமிழந்தார். ஆனால் மறுபுறம் தொடக்க வீரராக களமிறங்கி 12 ஓவர்கள் வரை களத்தில் நின்று செட்டிலான ராகுல் கடைசி வரை அதிரடியை துவக்காமல் வெறும் 1 பவுண்டரியுடன் 18 (20) ரன்களை 90.00 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்து அவுட்டாகி அடுத்து வந்த பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தினார்.

- Advertisement -

கரெக்ட்டா ஆடுனேன்:
இருப்பினும் அடுத்து வந்த நிக்கோலஸ் பூரான் சரமாரியாக அடித்து நொறுக்கி 62 (19) ரன்களும் ஆயுஷ் படோனி 30 (24) ரன்களும் எடுத்த நிலையில் கடைசி ஓவரில் கடைசி பந்தில் ஹர்ஷல் படேல் – தினேஷ் கார்த்திக் செய்த சொதப்பலால் லக்னோ த்ரில் வெற்றி பெற்றது. முன்னதாக கடந்த ஒரு வருடமாகவே அடித்து நொறுக்க வேண்டிய ஓப்பனிங் இடத்தில் தடவலாக செயல்பட்டு வரும் கேஎல் ராகுல் 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்ததால் ஓப்பனிங் இடத்தையும் துணை கேப்டன்ஷிப் பதவியையும் இழந்துள்ளார்.

அதனால் இந்த தொடரில் சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய அவர் முதல் 3 போட்டிகளிலும் அதிரடியாக விளையாடாதது ரசிகர்களை கடுப்பேற்றியது. அதை விட மிகவும் ஃபிளாட்டாகவும் பேட்டிங்க்கு சாதகமாகவும் தொட்டாலே சிக்ஸர்கள் பறக்கக்கூடிய அளவில் சிறிய பவுண்டரிகளை கொண்ட சின்னசாமி மைதானத்திலும் அதே தடவல் பேட்டிங்கை வெளிப்படுத்திய அவர் லக்னோவுக்கு கேப்டனாக பெரிய பின்னடைவை கொடுத்தார். ஒருவேளை 20 பந்துக்கு 30 ரன்கள் எடுத்திருந்தால் கூட கடைசியில் இந்தளவுக்கு போராடாமலேயே லக்னோவுக்கு வெற்றி கிடைத்திருக்கலாம்.

- Advertisement -

அதன் காரணமாக இவர் எதற்குமே சரிப்பட்டு வர மாட்டார் என்று மீண்டும் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள். ஆனால் ஆரம்பத்திலேயே 3 விக்கெட்டுகள் விழுந்ததால் நங்கூரமாக விளையாட வேண்டிய சூழ்நிலையில் தாம் சிறப்பாகவே செயல்பட்டதாக கொஞ்சமும் மனசாட்சியின்றி போட்டியின் முடிவில் கேஎல் ராகுல் பேசினார். அத்துடன் நேரம் செல்ல செல்ல தம்மால் அதிரடியாக விளையாடி ஸ்ட்ரைக் ரேட்டை அதிகப்படுத்தியிருக்க முடியும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

“நான் பெரிய ரன்கள் அடிக்க வேண்டும். இருப்பினும் நான் பெரிய ரன்களை அடிக்கும் போது என்னுடைய ஸ்டிரைக் ரேட் தாமாகவே உயரும் என்று நினைக்கிறேன். லக்னோவில் நடைபெற்ற கடந்த சில போட்டிகளில் பிட்ச் கடினமான நடைபெற்றது. ஆனால் இந்த போட்டியில் ஆரம்பத்திலேயே நாங்கள் 3 விக்கெட்டுகளை இழந்து விட்டதால் சூழ்நிலைக்கேற்றார் போல் விளையாடிய நான் சிறப்பாக செயல்பட்டதாகவே உணர்ந்தேன்”

இதையும் படிங்க: IPL 2023 : அலெக்ஸ் ஹேல்ஸ் உலக சாதனை சமன், வேறு யாருமே படைக்காத தனித்துவமான ஐபிஎல் வரலாறு படைத்த கிங் கோலி

“ஒருவேளை அதே போல் கடைசி வரை விளையாடியிருந்தால் இறுதியில் நிக்கோலஸ் பூரான் இன்னும் சற்று எளிதாக வெற்றியை பெற்றுக் கொடுத்திருப்பார். எனவே அடுத்து வரும் போட்டிகளில் நல்ல இன்னிங்ஸ்களை விளையாடும் போது நான் நல்லபடியாக உணர்ந்து சிறப்பாக விளையாடுவேன்” என்று கூறினார். அதை பார்க்கும் ரசிகர்கள் நல்ல வேளையாக அவுட்டானீர்கள் இல்லையேல் கடைசியில் நிக்கோலஸ் பூரான் போராடினாலும் லக்னோ வென்றிருக்காது என்று கலாய்த்து வருகிறார்கள்.

Advertisement