அந்த 2 திறமை பயிற்சி செய்யாம இயற்கையாவே கிடைச்சுருக்கு.. ஹைதராபாத்தை சாய்த்தது பற்றி நிக்கோலஸ் பூரான் பேட்டி

- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மார்ச் 27ஆம் தேதி நடைபெற்ற 7வது லீக் போட்டியில் ஹைதராபாத் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ தோற்கடித்தது. அந்தப் போட்டியில் தங்களது சொந்த மண்ணில் முதலில் விளையாடிய ஹைதராபாத் 190-9 ரன்கள் மட்டுமே அடித்தது. அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 47, அன்கிட் வர்மா 36 ரன்கள் எடுத்த நிலையில் லக்னோ அணிக்கு அதிகபட்சமாக சர்துல் தாக்கூர் 4 விக்கெட்டுகளை எடுத்தார்.

அடுத்ததாக விளையாடிய லக்னோ அணிக்கு துவக்க வீரர் மிட்சேல் மார்ஷ் 52 (31) ரன்கள் அடித்து அசத்தினார். ஆனால் அவருடன் சேர்ந்து எதிர்ப்புறம் நம்பிக்கை நட்சத்திரம் நிக்கோலஸ் பூரான் ஹைதராபாத் பவுலர்களை தம்முடைய ஸ்டைலில் முரட்டுத்தனமாக அடித்து 6 பவுண்டரி 6 சிக்ஸர்களை பறக்க பறக்க விட்டார். அந்த வகையில் 269.23 ஸ்ட்ரைக் ரேட்டில் ஹைதராபாத்தை புரட்டிய அவர் 70 (26) ரன்கள் குவித்தார்.

- Advertisement -

மிரட்டிய பூரான்:

இறுதியில் டேவிட் மில்லர் 13*, அப்துல் சமத் 22* ரன்கள் எடுத்த உதவியுடன் 16.1 ஓவரிலேயே இலக்கைத் தொட்ட லக்னோ தங்களது முதல் வெற்றியைப் பதிவு செய்தது. மறுபுறம் சொந்த மண்ணில் 300 ரன்கள் அடிக்கும் என்று எதிர்பார்த்த ஹைதராபாத்துக்கு அதிகபட்சமாக கேப்டன் கமின்ஸ் 2 விக்கெட் எடுத்தும் முதல் தோல்வியை தவிர்க்க முடியவில்லை. இந்நிலையில் சிக்ஸர்கள் அடிப்பதற்காக தாம் திட்டமிடுவதில்லை என்று பூரான் கூறியுள்ளார்.

மேலும் பேட்டை வேகமாக சுழற்றுவதற்கும் பயிற்சிகள் எடுப்பதில்லை என்று தெரிவிக்கும் அவர் அவை இயற்கையாகவே தமக்கு கிடைத்த திறமை என்று கூறியுள்ளார். இந்தப் போட்டியில் ஹைதராபாத் அணியை தோற்கடித்தது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஆரஞ்சு தொப்பி பெரியது. அதற்காக நன்றாக உணர்கிறேன். சிக்ஸர்கள் அடிப்பதற்காக நான் திட்டமிடுவதில்லை”

- Advertisement -

இயற்கையான திறமை:

“மாறாக நல்ல இடத்தில் நின்று பந்தை சரியான டைம்ங்கில் அடிக்க முயற்சிக்கிறேன். அதற்கு தகுந்த பொருத்தம் வரும் போது நீங்கள் உங்களுடைய திறனை செயல்படுத்த முயற்சிக்கு வேண்டும். பிட்ச் அழகாக இருந்தது. ஒவ்வொரு முறையும் ஹைதராபாத்துக்கு நீங்கள் வரும் போது பெரிய ரன்கள் அடிக்கப்படும். இங்கே டாஸ் வென்றது நல்லது”

இதையும் படிங்க: ஆர்.சி.பி அணிக்கெதிரான போட்டியிலும் பதிரானா ஆடமாட்டார்.. உறுதிசெய்த கோச் பிளமிங் – என்ன காரணம்?

“நீங்கள் பவர் பிளே ஓவர்களில் விக்கெட்டுகளை விடாமல் இருந்தால் பின்னர் அதிரடியாக விளையாடச் செல்லலாம். எனது பேட் வேகத்தில் நான் வேலை செய்தது கிடையாது. அந்த அற்புதமான திறமைக்காக ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறேன். இந்தப் பெரிய தொடரில் மிட்சேல் மார்ஷ் தன்னுடைய திறமையும் காண்பிப்பதைப் பார்ப்பது நன்றாக இருக்கிறது. வலது இடது கை ஜோடியாக நாங்கள் சேர்ந்து விளையாடுவது முக்கியம். அனைத்து புறங்களிலும் அடித்து பார்ட்னர்ஷிப் அமைத்து எங்களது எதிரணியின் பொருத்தத்தை உடைக்கிறோம்” என்று கூறினார்.

Advertisement