இந்தியாவில் கடந்த மார்ச் 22-ஆம் தேதி துவங்கிய 18-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் இரண்டாவது லீக் ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடிய சி.எஸ்.கே அணியானது பலம் வாய்ந்த மும்பை இந்தியன்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் போட்டியிலேயே அற்புதமான வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது.
இரண்டாவது போட்டியிலும் பதிரானா ஆடமாட்டார் : ஸ்டீபன் பிளமிங்
இந்த ஆண்டுடன் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஐ.பி.எல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுவதால் சாம்பியன் பட்டத்துடன் அவரை வழியனுப்ப வேண்டும் என்று அனைவரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையிலே சிஎஸ்கே அணி இந்த தொடரை வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது ரசிகர்கள் மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் இந்த தொடரின் முதல் போட்டியில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான மதிஷா பதிரானா காயம் காரணமாக இடம்பெற முடியாமல் போனது பலரது மத்தியிலும் ஏமாற்றத்தை அளித்தது. இந்நிலையில் மார்ச் 28-ஆம் தேதி இன்று ஆர்.சி.பி அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டாவது லீக் ஆட்டத்தில் சென்னை அணி சேப்பாக்கம் மைதானத்தில் விளையாட இருக்கிறது.
இந்த இரண்டாவது லீக் ஆட்டத்திலும் மதிஷா பதிரானா விளையாட மாட்டார் என சிஎஸ்கே அணியின் பயிற்சியாளரான ஸ்டீபன் பிளமிங் உறுதி செய்துள்ளார். இது குறித்து பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ஸ்டீபன் பிளெமிங் கூறுகையில் :
மதீஷா பதிரனாவிற்கு ஏற்பட்டுள்ள காயம் இன்னும் முழுமையாக குணமடையாததால் அவர் ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியிலும் விளையாட மாட்டார். தற்போது காயத்தில் இருந்து படிப்படியாக முன்னேறி வரும் பதிரானா முழு உடற்தகுதியை எட்டிய பின்னர் தான் அணிக்கு திரும்புவார் என்று அவர் கூறியுள்ளதால் இன்றைய ஆர்.சி.பி அணிக்கு எதிரான போட்டியில் பதிரானா விளையாட மாட்டார் என்பது உறுதியாகியுள்ளது.
இதையும் படிங்க : என்னை நொறுக்க பாத்த ஹெட்டுக்கு இதை செஞ்சேன்.. ஜஹீர் தான் வரவச்சாரு.. இது நியாயமில்ல மாத்துங்க.. தாகூர் பேட்டி
அதேவேளையில் பதிரானா எப்போது பிளேயிங் லெவனுக்குள் வருவார்? என்பது குறித்த கேள்விக்கு அவர் பதிலளிக்கவில்லை. இதன் காரணமாக இன்னும் சில போட்டிகளையும் அவர் தவறவிட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2022-ஆம் ஆண்டு ஐ.பி.எல் போட்டிகளில் அறிமுகமாகிய மதீஷா பதிரனா இதுவரை 20 போட்டிகளில் விளையாடி 34 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.



