இவர் தொடர்ந்து இப்படியே விளையாடினா பஞ்சாப் அணி அவ்ளோதான் – இக்கட்டான நிலையில் அதிரடி வீரர்

- Advertisement -

நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த ஐபிஎல்லின் எட்டாவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பீல்டிங் தேர்ந்தெடுத்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் அனைவரும் தொடர்ச்சியாக தங்களது விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பிக் கொண்டிருந்தனர். 20 ஓவர்கள் முடிவில் அந்த அணியால் 106 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இந்தப் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.

chahar 1

- Advertisement -

அந்த அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் பேட்ஸ்மேனான நிக்கோலஸ் பூரன் தொடர்ச்சியாக இரண்டாவது முறை ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். ஐ.பி.எல் தொடரில் சீசன் ஆரம்பத்தின் போதே 2 போட்டிகளில் டக் அவுட் ஆன வீரராக கம்பீர் இருக்கிறார். அவருக்கு பிறகு ஒரு வீரர் சீசன் ஆரம்பத்திலே தொடர்ந்து 2 முறை டக் அவுட்டாவது இதுவே முதல் முறையாகும்.

பஞ்சாப் அணியை பொறுத்தவரை அந்த அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான ராகுல், மயங்க் அகர்வால், கிறிஸ் கெயில் போன்றவர்கள் அபாரமாக ஆடினால் தான் அந்த அணியால் பெரிய அளவிலான ரன்களை அடிக்க முடிகிறது. ஒருவேளை அவர்கள் ஆரம்பித்திலேயே அவுட்டாகி வெளியேறினால் அந்த அணி அப்படியே சுருண்டு விடுகிறது.

pooran

இந்த சூழ்நிலையில் அந்த அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் அதிரடி ஆட்டக்காரரான நிக்கோலஸ் பூரான் இப்படி பொறுப்பற்ற ஆட்டத்தை வெளிப்படுத்துவது அந்த அணிக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். எனவே இனிவரும் போட்டிகளில் அவர் பொறுப்பினை உணர்ந்து ஆடவில்லை என்றால் அது பஞ்சாப் அணிக்கு பெரிய பலவீனத்தை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஐபிஎல் சீசன் மற்றும் நடந்து முடிந்த பிக் பாஸ் லீக்கிலும் அதிரடியாக ஆடி தனது திறமையை நிரூபித்த நிக்கோலஸ் பூரன் இனிவரும் ஆட்டங்களில் தனது அதிரடி பேட்டிங்லால் மீண்டும் தனது திறமையை நிரூபிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.

Advertisement