- Advertisement -
உலக கிரிக்கெட்

42/5 டூ 173.. மிரட்டிய தெ.ஆ.. ஒரே ஓவரில் 6, 6, 6, 6.. வெ.இ பதிலடி.. 250 ஸ்ட்ரைக் ரேட்டில் ஓடவிட்ட பூரான்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக தங்களது சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் 1 – 0 (2) என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் தோல்வியை சந்தித்தது அதைத் தொடர்ந்து அவ்விரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. அத்தொடரின் முதல் போட்டி ஆகஸ்ட் 24ஆம் தேதி இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு ட்ரினிடாட் நகரில் நடைபெற்றது.

அப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்காவுக்கு ரிக்கல்ட்டன் 4, ரீஸா ஹென்றிக்ஸ் 4, கேப்டன் ஐடன் மார்க்கம் 14, வேன் டெர் டுஷன் 5, ஃபெரரியா 8 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் 42/5 என ஆரம்பத்திலேயே தென் ஆப்பிரிக்கா தடுமாறியது.

- Advertisement -

மிரட்டய தென்னாப்பிரிக்கா:

இருப்பினும் அப்போது ஜோடி சேர்ந்த ட்ரிஷ்டன் ஸ்டப்ஸ் மற்றும் பட்ரிக் க்ருகர் ஆகியோர் அதிரடியாக விளையாடினர். குறிப்பாக வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்ட ட்ரிஷ்டன் ஸ்டப்ஸ் அரை சதமடித்து சவாலை கொடுத்தார். அந்த வகையில் 6வது விக்கெட்டுக்கு 71 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த ஜோடியில் க்ருகர் 44 (32) ரன்களில் அவுட்டானார்.

அவருடன் சேர்ந்து விளையாடிய ஸ்டப்ஸ் 8 பவுண்டரி 3 சிக்சருடன் 76 (42) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதனால் தப்பிய தென்னாப்பிரிக்கா 20 ஓவரில் 176 ரன்கள் எடுத்தது வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அதிகபட்சமாக மேத்தியூ போர்ட்ஜ் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத்தொடர்ந்து 175 ரன்களை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 84 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த அலிக் அதனேஷ் 40 (30) ரன்கள் குவித்து நல்ல துவக்கத்தை கொடுத்து அவுட்டானார்.

- Advertisement -

வெளுத்த பூரான்:

அவருடன் சேர்ந்து விளையாடிய ஷாய் ஹோப் 51 (36) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஆனால் அடுத்ததாக வந்த நிக்கோலஸ் பூரான் ஸ்டைலில் அதிரடியாக விளையாடி தென்னாப்பிரிக்கா பவுர்களை புரட்டி எடுத்தார். குறிப்பாக நன்ரே பர்கர் வீசிய 12வது ஓவரின் கடைசி 4 பந்துகளில் 6, 6, 6, 6 என அடுத்தடுத்த 4 சிக்சர்களைப் பறக்க விட்ட அவர் மொத்தம் 2 பவுண்டரி 7 சிக்சருடன் 65* (26) ரன்களை 250 ஸ்ட்ரைக் ரேட்டில் ஃபினிஷிங் செய்தார்.

இதையும் படிங்க: கேப்டனாக நான் தொடர்ந்து கோப்பைகளை கைப்பற்றி வர இதுவே காரணம்.. விருது விழாவில் பேசிய – ரோஹித் சர்மா

அதனால் 17.5 ஓவரிலேயே 176-3 ரன்கள் எடுத்த வெஸ்ட் இண்டீஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதான வெற்றி பெற்றது. அந்த வகையில் வெஸ்ட் தொடரில் சந்தித்த தோல்விக்கு தென்னாப்பிரிக்காவுக்கு பதிலடி கொடுத்த வெஸ்ட் இண்டீஸ் டி20 கிரிக்கெட்டில் சோடை போகவில்லை என்பதை நிரூபித்து 1 – 0* (3) என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. மறுபுறம் தென்னாபிரிக்காவுக்கு அதிகபட்சமாக பார்ட்மேன் 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை.

- Advertisement -