கேப்டனாக நான் தொடர்ந்து கோப்பைகளை கைப்பற்றி வர இதுவே காரணம்.. விருது விழாவில் பேசிய – ரோஹித் சர்மா

Rohit
- Advertisement -

கடந்த 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரை தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி கைப்பற்றி இருந்தது. அதற்கு அடுத்து பல்வேறு ஐசிசி தொடர்களில் அரையிறுதி போட்டி, இறுதிப்போட்டி என கடைசி கட்டத்தை இந்திய அணி எட்டி இருந்தாலும் கோப்பையை கைப்பற்ற முடியாமல் தவித்து வந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு நடைபெற்ற இந்த 2024 டி20 உலக கோப்பை தொடரை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கைப்பற்றி 11 ஆண்டுகால சோகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து இரண்டாவது முறையாக டி20 உலக கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

கோப்பைகளை வென்ற ரோஹித் சர்மா :

இந்த இறுதிப்போட்டி முடிவடைந்ததும் இந்திய அணியின் அனுபவ வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் ஜடேஜா போன்றோர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தனர். அவர்களது இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்தது.

- Advertisement -

அதனைத்தொடர்ந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஸ் தொடரை கைப்பற்றும் முனைப்புடன் தயாராகி வருகிறது. இந்நிலையில் டி20 உலக கோப்பை தொடரை வென்ற பின்னர் தற்போது பொதுவெளியில் பரிசு விழா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவிற்கு நடப்பு ஆண்டில் சிறந்த வீரருக்கான விருது வழங்கப்பட்டது.

அந்த விருது விழாவில் பேசிய ரோஹித் சர்மா தான் தொடர்ந்து கோப்பைகளை வெல்ல என்ன காரணம்? என்று குறித்தும் பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : நான் ஐந்து ஐபிஎல் கோப்பைகளை வென்றதற்கு ஒரு காரணம் இருக்கிறது. நான் கோப்பையை வெல்வதை நிறுத்தப் போவதில்லை.

- Advertisement -

ஏனென்றால் உங்களுக்கு போட்டிகளையும், கோப்பைகளையும் ஒருமுறை வென்று சுவை கிடைத்து விட்டால் அதை மீண்டும் மீண்டும் வெல்ல நினைப்பீர்கள். அந்த ஆசைதான் என்னை அடுத்தடுத்த கோப்பைகளை கைப்பற்ற வைக்கிறது. இனிவரும் தொடர்களிலும் ஒரு அணியாக செயல்பட்டு பல்வேறு கோப்பைகளை வெல்லப் போகிறோம் என ரோகித் சர்மா கூறினார்.

இதையும் படிங்க : அழ விரும்பல ஆனா.. சர்வதேச – உள்ளூர் கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்த ஷிகர் தவான்.. ஐபிஎல் தொடரிலும் ஓய்வா?

மேலும் தொடர்ந்து பேசிய அவர் புள்ளிவிவரங்கள், மைல்கற்களை பற்றி யோசிக்காமல் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்பது மட்டுமே என்னுடைய கனவாக இருக்கிறது. தற்போதைய இந்திய அணியின் நிர்வாகத்தில் ஜெய் ஷா, டிராவிட், அகார்கர் ஆகிய மூன்று பேரிடம் இருந்து எனக்கு நிறைய உதவி கிடைத்தது. அதன் காரணமாகவும் எங்களால் சிறப்பாக செயல்பட முடிந்தது என ரோகித் சர்மா பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement