ஐ.பி.எல் தொடரில் கிடைத்த சம்பளத்தின் ஒரு பகுதியை கொரோனா மீட்பு நிதியாக அளித்த மே.இ வீரர் – ரசிகர்கள் பாராட்டு

Pooran

இந்தியாவில் தற்போது கொரோனாவின் இரண்டாவது நிலை மிக வேகமாக பரவி வருவதால் இந்தியா முழுவதும் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர். நாள்தோறும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு தேவையான உபகரணங்கள், ஆக்சிஜன் சிலிண்டர் என பல்வேறு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த கொரோனா வைரஸ் காரணமாக கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் மீண்டும் உயிரிழப்பு அதிகரிக்க துவங்கியுள்ள நிலையில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Corona-1

மேலும் தற்போதைய நிலையில் மற்ற நாடுகளை காட்டிலும் இந்தியா அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளதால் பல்வேறு நாடுகளிலும் இருந்தும் உதவிகள் குவிந்து வருகின்றன. அதே வகையில் ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் வீரர்கள் மட்டுமின்றி முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் இந்தியாவிற்கு உதவி வருகின்றனர்.

அந்த வகையில் கொல்கத்தா அணியின் வேகப்பந்து வீச்சாளரான பேட் கம்மின்ஸ் 37 லட்ச ரூபாயும், முன்னாள் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ 41 லட்ச ரூபாய் கொடுத்து உதவிணார். அதனைத் தொடர்ந்து சச்சின் ஒரு கோடி ரூபாய் நிதி உதவி அளிக்க ராஜஸ்தான் ராயல்ஸ் 7.5 கோடி, டெல்லி ஒன்றரை கோடி என நிதி உதவிகளை வழங்கி வருகின்றனர்.

pooran

இப்படி நிதி உதவிகளை வழங்குவது மட்டுமின்றி இந்த கொரோனாவில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் தற்போது பஞ்சாப் அணியில் விளையாடி வரும் நிக்கலஸ் பூரன் இந்த ஐபிஎல் தொடரின் மூலம் கிடைக்கும் சம்பளத்தில் ஒரு பகுதியை 4.5 கோடி கோடியை மருத்துவ உதவிக்காக இந்தியாவிற்கு கொடுப்பதாக அறிவித்துள்ளார்.

- Advertisement -

மேலும் தன்னால் முடிந்த அளவு விழிப்புணர்வையும் ஏற்படுத்த உள்ளதாக அவர் உறுதியளித்துள்ளார். அவரின் இந்த செய்கை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.