1932 முதல் 17 முறை.. பணத்துக்காக மாபெரும் கௌரவத்தை இழந்த தெ.ஆ.. 91 வருட வரலாற்றை மாற்றி எழுதிய நியூசிலாந்து

- Advertisement -

தென்னாபிரிக்காவுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் வென்ற நியூசிலாந்து ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அதைத் தொடர்ந்து இத்தொடரின் இரண்டாவது போட்டி பிப்ரவரி 11ஆம் தேதி ஹமில்டன் நகரில் துவங்கியது. அந்தப் போட்டியிலும் சிறப்பாக விளையாடிய நியூசிலாந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

அந்த வகையில் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெற்ற இந்த தொடரின் 2 போட்டிகளிலும் தென்னாப்பிரிக்காவை தோற்கடித்த நியூசிலாந்து 2 – 0 என்ற கணக்கில் கோப்பையை வென்றது. முன்னதாக ஐபிஎல் போட தென்னாபிரிக்க வாரியம் தங்களுடைய நாட்டில் எஸ்ஏ20 எனும் டி20 கிரிக்கெட் தொடரை கடந்த வருடம் துவங்கியது.

- Advertisement -

பணத்தால் பறிபோன கெளரவம்:
அதனுடைய இரண்டாவது சீசன் கடந்த ஜனவரி 10ஆம் தேதி துவங்கி பிப்ரவரி 10ஆம் தேதி நிறைவு பெற்றது. அதில் குயிண்டன் டீ காக், ரபாடா, ஐடன் மார்க்ரம், டேவிட் மில்லர் உள்ளிட்ட அனைத்து நட்சத்திரம் முதன்மை வீரர்களும் விளையாடுவதற்கு அனுமதி கொடுத்த தென்னாப்பிரிக்க வாரியம் இந்த நியூசிலாந்து தொடரில் நெய்ல் பிராண்ட் தலைமையிலான இரண்டாவது தர அணியை களமிறக்கியது.

அதாவது டி20 தொடரில் முதன்மை நட்சத்திர வீரர்கள் விளையாடாமல் போனால் அதை பார்க்க யாரும் வர மாட்டார்கள் என்று கருதிய தென்னாப்பிரிக்க வாரியம் தங்களுடைய நட்சத்திர வீரர்களை டெஸ்ட் தொடரில் தேர்வு செய்யவில்லை. மேலும் இதற்கு முன் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகாத நெய்ல் பிராண்ட் எனும் வீரரை இத்தொடரில் கேப்டனாக அறிவித்த தென்னாபிரிக்க வாரியம் 7 புதுமுக வீரர்களையும் சேர்த்தது.

- Advertisement -

அந்த நிலையில் நடைபெற்ற இந்த தொடரின் முதல் போட்டியில் கேப்டன் நெய்ல் பிராண்ட் உட்பட 6 தென்னாப்பிரிக்க வீரர்கள் அறிமுகமாக களமிறங்கினார்கள். அந்த போட்டியில் அனுபவமில்லாத இளம் தென்னாபிரிக்க அணியை எதிர்பார்த்ததைப் போலவே அசால்டாக தோற்கடித்த நியூசிலாந்து இரண்டாவது போட்டியிலும் வீழ்த்தி ஒய்ட்வாஷ் செய்து கோப்பையை வென்றுள்ளது.

இதையும் படிங்க: 7க்கு 7.. மாஸ்டர் க்ளாஸ் சதமடித்த வில்லியம்சன்.. தெ.ஆ அணியை வீழ்த்தி.. ஸ்மித்தை முந்தி உலக சாதனை

சொல்லப்போனால் கடந்த 1932 முதல் தென்னாபிரிக்காவுக்கு எதிராக விளையாடி வரும் நியூசிலாந்து 91 வருடம் கழித்து 17 தொடர் தோல்விகளுக்குப் பின் முதல் முறையாக ஒரு டெஸ்ட் தொடரை வென்று புதிய சரித்திரம் படைத்துள்ளது. மறுபுறம் கடந்த 90 வருடங்களில் விளையாடிய 17 தொடர்களிலும் ஒரு முறை கூட நியூசிலாந்திடம் தோற்காமல் தென்னாபிரிக்கா வெற்றி நடை போட்டு வந்தது. ஆனால் இம்முறை நாட்டை விட பணம் தான் முக்கியம் என்று கருதிய தென்னாப்பிரிக்கா அதற்கு பரிசாக டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக தென்னாப்பிரிக்காவிடம் ஒரு தொடரில் அவமான தோல்வியை சந்தித்து மாபெரும் கௌரவத்தை இழந்துள்ளது.

Advertisement