ரன்களை வாரி வழங்கிய இந்திய பவுலர்கள். இமாலய இலக்கு நிர்ணயம். வெற்றி பெறுமா ? – இந்திய அணி

- Advertisement -

இந்தியா நியூசிலாந்து அணிக்கு எதிராக 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி இவ்விரு அணிகளுக்கும் இடையே இன்று ஆக்லாந்து மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

IndvsNz

- Advertisement -

அதன்படி முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக துவக்க வீரர் முன்ரோ 59 ரன்களும், ராஸ் டெய்லர் ஆட்டமிழக்காமல் 54 ரன்களும் குவித்தனர். அதனால் தற்போது இந்திய அணி 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்க தயாராகி வருகிறது.

இந்த மைதானம் முற்றிலும் பேட்டிங்கிற்கு சாதகமான மைதானம் என்பதாலும் அளவில் சிறிய மைதானம் என்பதாலும் நியூசிலாந்து வீரர்கள் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினார். பவுண்டரிகளும், சிக்ஸர்களுமாக விரட்டிய அவர்கள் 20 ஓவர்கள் முடிவில் 203 ரன்களை அசால்டாக குவித்தனர். இதனை இந்திய அணி வெற்றிகரமாக துரத்துமா ? என்பது முடிவில் தெரியவரும்.

Williamson

ஆனால் இந்த போட்டி பந்துவீச்சாளர்களுக்கு சுத்தமாக கைகொடுக்கவில்லை. பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகவே மைதானம் இருப்பதால் இந்திய அணி வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது. இந்திய பந்துவீச்சாளர்களில் சாஹலை தவிர மற்ற அனைவரும் ஓவருக்கு 8 ரன்களுக்கு மேல் விட்டுக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement