- Advertisement -
உலக கிரிக்கெட்

100 ரன்ஸ்.. மில்லரின் போராட்டம் வீண்.. வெளியேறிய தெ.ஆ.. ஃபைனலில் நியூஸி 25 வருட சோகத்தால் இந்திய ரசிகர்கள் கவலை

ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது செமி ஃபைனல் மார்ச் 5ஆம் தேதி பாகிஸ்தானில் உள்ள லாகூர் நகரில் நடைபெற்றது. அதில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய நியூஸிலாந்து வில் எங் 21 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்.

இருப்பினும் மற்றொரு ஓப்பனிங் பேட்ஸ்மேன் ரச்சின் ரவீந்தரா நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்தினார். அவருடன் அடுத்ததாக சேர்ந்த கேன் வில்லியம்சன் தம்முடைய அனுபவத்தைக் காட்டி தென்னாப்பிரிக்காவை சிறப்பாக எதிர்கொண்டார். அந்த வகையில் இரண்டாவது விக்கெட்டுக்கு 164 ரன்கள் பார்ட்னர்ஷிப் அந்த ஜோடியில் இருவருமே சதம் அடித்து அசத்தினார்கள்.

- Advertisement -

நியூஸிலாந்து அபாரம்:

அதில் ரவீந்திரா 108, வில்லியம்சன் 102 ரன்கள் எடுத்து அசத்தினர். மிடில் ஆர்டரில் டாம் லாதம் 4 ரன்னில் அவுட்டானாலும் டேரில் மிட்சேல் 49 ரன்கள் எடுத்து அசத்தினார். கடைசியில் கிளன் பிலிப்ஸ் அதிரடியாக விளையாடி 49* (27) ரன்கள் குவித்து நல்ல ஃபினிஷிங் கொடுத்தார். அதனால் 50 ஓவரில் 362-6 ரன்கள் குவித்த நியூசிலாந்து சாம்பியன்ஸ் டிராபியில் அதிகபட்ச ஸ்கோர் அடித்து உலக சாதனை படைத்தது.

தென் ஆப்பிரிக்காவுக்கு அதிகபட்சமாக லுங்கி நெகிடி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அடுத்ததாக 363 ரன்களை துரத்திய தென்னாப்பிரிக்காவுக்கு ரியான் ரிக்கள்டன் 17 ரன்களில் அவுட்டானார். இருப்பினும் இரண்டாவது விக்கெட்டுக்கு 105 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த தெம்பா பவுமாவை 56 ரன்களில் கேப்டன் சான்ட்னர் அவுட்டாக்கினார்.

- Advertisement -

மில்லர் போராட்டம்:

அப்படியே அவருடன் ஜோடி சேர்ந்து விளையாடிய வேன் டெர் டுசனையும் 69 ரன்களில் அவுட்டாக்கிய சான்ட்னர் அடுத்ததாக வந்த அதிரடி நாயகன் ஹென்றிச் க்ளாஸெனை 3 ரன்னில் அவுட்டாக்கி அழுத்தத்தை உண்டாக்கினார். அடுத்த சில ஓவரில் மறுபுறம் அதிரடி காட்ட முயற்சித்த ஐடன் மார்க்ரம் 31 ரன்னில் அவுட்டாகி அழுத்தத்தை அதிகரித்தார். ஆனால் டேவிட் மில்லர் மிடில் ஆர்டரில் தனியாளாக வெறித்தனமாக போராடி கடைசி பந்தில் சதத்தை அடித்து 100* (67) ரன்கள் விளாசினார்.

இதையும் படிங்க: சதத்தை விட இந்தியாவின் வெற்றியே முக்கியம்.. இதை செஞ்சா போதும் ஈஸியா சேசிங் செய்யலாம்.. சேஸ் மாஸ்டர் கோலி

அதையும் தாண்டி 50 ஓவரில் 312-9 ரன்கள் மட்டுமே எடுத்த தென்னாப்பிரிக்கா தோல்வியை சந்தித்து தொடரிலிருந்து வெளியேறியது. மறுபுறம் 50 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற நியூஸிலாந்து ஃபைனலில் இந்தியாவை எதிர்கொள்ள தகுதி பெற்றது. அதைப் பார்த்து இந்திய ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். ஏனெனில் 2000 சாம்பியன்ஸ் ட்ராபி ஃபைனலில் இந்தியாவை தோற்கடித்த நியூஸிலாந்து 2021 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலிலும் தோற்கடித்தது. வரலாற்றில் ஒரு முறை கூட ஐசிசி ஃபைனலில் நியூசிலாந்து அணி இந்தியா தோற்கடித்ததில்லை.

- Advertisement -