
நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அங்கு 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. அத்தொடரின் முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வென்ற நிலையில் 2வது போட்டியில் நியூசிலாந்து வென்றது. 3வது போட்டியிலும் நியூசிலாந்து வென்ற நிலையில் 4வது போட்டி மழையால் கைவிடப்பட்டது. இறுதியில் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் கடைசிப் போட்டி நவம்பர் 13ஆம் தேதி இந்திய நேரப்படி அதிகாலை 5.45 மணிக்கு துவங்கியது.
அப்போட்டி நியூசிலாந்தில் இருக்கும் டுனிடின் நகரில் உள்ள யுனிவர்சிட்டி ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. அப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் ஆரம்பம் முதலே தடுமாற்றமாக பேட்டிங் செய்து 18.4 ஓவரில் 140 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
அதிகபட்சமாக ரோஸ்டன் சேஸ் 38, ரொமாரியா செஃபார்ட் 36, ஜேசன் ஹோல்டர் 20 ரன்கள் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ்க்கு அதிகபட்சமாக ஜேக்கப் டுபி 4, ஜிம்மி நீசம் 2 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்கள். அடுத்து விளையாடிய நியூசிலாந்துக்கு 69 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த டிம் ராபின்சன் 5 பவுண்டரி 3 சிக்சருடன் 45 (24) ரன்கள் குவித்து அவுட்டானார்.
மறுபுறம் டேவோன் கான்வே நிதானமாக விளையாடிய நிலையில் அடுத்து வந்த ரச்சின் ரவீந்தரா 21 (16) ரன்கள் குவித்து விக்கெட்டை இழந்தார். அதைத் தொடர்ந்து வந்த மார்க் சாப்மேன் 2 சிக்ஸருடன் 21* (13) ரன்கள் குவித்து போட்டியை முடித்தார். இந்தப் பக்கம் தொடர்ந்து நிதானமாகவே விளையாடிய கான்வே 47* (42) ரன்கள் எடுத்ததால் நியூஸிலாந்து 15.4 ஓவரிலேயே 141/2 ரன்களை குவித்தது.
அதனால் 8 விக்கெட் வித்யாசத்தில் வெஸ்ட் இண்டீஸை எளிதாக தோற்கடித்த நியூசிலாந்து 3 – 1 (5) என்ற கணக்கில் இத்தொடரை வென்றது. இதையும் சேர்த்து டுனிடின் மைதானத்தில் விளையாடிய 18 சர்வதேச போட்டிகளில் நியூசிலாந்து 18 வெற்றிகளைப் பெற்று சாதனை படைத்துள்ளது. அம்மைதானத்தில் இதுவரை நியூஸிலாந்து 8 டெஸ்ட், 10 ஒருநாள், 5 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளது.
இதையும் படிங்க: பாகிஸ்தானை விட்டு வெளியே போகணும் ப்ளீஸ் விட்ருங்க.. கெஞ்சிய இலங்கை வீரர்களை அடிபணிய வைத்த வாரியம்
அதில் 10 ஒருநாள் போட்டிகளில் 10 வெற்றிகளைப் பெற்றுள்ள நியூசிலாந்து டி20 கிரிக்கெட்டில் 5க்கு 5 வெற்றிகளைப் பெற்றுள்ளது. 8 டெஸ்ட் போட்டிகளில் நியூஸிலாந்து 5 வெற்றிகளைப் பெற்ற நிலையில் 3 போட்டிகள் டிராவில் முடிந்தன. அந்த வகையில் டுனிடின் கோட்டையில் வெஸ்ட் இண்டீஸை எளிதாக சாய்த்த நியூசிலாந்து 18க்கு 18 வெற்றிகளைப் பெற்று ரசிகர்களை வியக்க வைக்கிறது. அந்த சாதனைப் பட்டியலில் ஹைதராபாத் மைதானத்தில் பாகிஸ்தான் 10 போட்டிகளில் தோற்காமல் 2வது இடத்தைப் பிடிக்கிறது.