3 ரன்ஸ்.. முத்தரப்பு ஃபைனலில் சோக் செய்த தெ.ஆ.. கைமீறிய வெற்றியை பறித்த நியூஸிலாந்து வென்றது எப்படி?

RSA vs NZ
- Advertisement -

ஜிம்பாப்வே நாட்டில் 2026 டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் முத்தரப்பு தொடர் நடைபெற்றது. அந்தத் தொடரில் ஜிம்பாப்பே, தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதின. அத்தொடரில் எதிர்பார்த்ததை போலவே ஜிம்பாப்வே அணி சுமாராக விளையாடி லீக் சுற்றுடன் வெளியேறியது. மறுபுறம் தென்னாபிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் தேவையான வெற்றிகளுடன் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.

அதைத்தொடர்ந்து மாபெரும் இறுதிப்போட்டி ஜூலை 26ஆம் ஹராரே நகரில் இந்திய நேரப்படி மாலை 4.30 நடைபெற்றது. அப்போட்டியில் டாஸ் அதிர்ஷ்டத்தைப் பெற்ற தென்னாப்பிரிக்கா முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்துக்கு 75 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த போதிலும் மெதுவாக விளையாடிய டிம் சைபர்ட் 30 (28) ரன்களில் அவுட்டானார்.

- Advertisement -

நியூஸிலாந்து அசத்தல்:

இருப்பினும் மறுபுறம் அதிரடியாக விளையாடிய டேவோன் கான்வே 47 (31) ரன்கள் விளாசி அசத்தினார். அவருடன் சேர்ந்து விளையாடிய ரச்சின் ரவீந்திரா அபாரமாக பேட்டிங் செய்து 47 (27) ரன்கள் குவித்து நியூசிலாந்து வெளிப்படுத்தினார். லோயர் ஆர்டரில் டேரில் மிட்சேல் 16*, மைக்கேல் பிரேஸ்வேல் 15 ரன்கள் எடுத்த உதவியுடன் 20 ஓவரில் நியூசிலாந்து 180/5 ரன்கள் குவித்தது.

தென்னாபிரிக்காவுக்கு அதிகபட்சமாக லுங்கி நெகிடி 2 விக்கெட்டுகள் எடுத்தார். அடுத்ததாக விளையாடிய தென்னாபிரிக்காவுக்கு 92 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து அபார துவக்கத்தைக் கொடுத்த பிரிட்டோரியஸ் அரை சதத்தை அடித்து 51 (35) ரன்கள் அடித்தார். மறுபுறம் நிதானமாக விளையாடிய ரிசா ஹென்றிக்ஸ் 37 (31) ரன்கள் குவித்து விக்கெட்டை இழந்தார்.

- Advertisement -

நியூஸிலாந்து வெற்றி:

ஆனால் 3வது இடத்தில் பேட்டிங் செய்த கேப்டன் வேன் டெர் டுஷன் 18 (17) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார். அதே போல ரூபின் ஹெர்மன் 11 (8) ரன்களில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினார். இருப்பினும் இளம் வீரர் தேவால்ட் ப்ரேவிஸ் அதிரடியாக விளையாடி வேகமாக ரன்கள் சேர்த்தார். அதனால் வெற்றியை நெருங்கிய தென்னாபிரிக்காவுக்கு கடைசி ஓவரில் வெறும் 7 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டதால் எளிதாக வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அந்த ஓவரை வீசிய மாட் ஹென்றி முதல் பந்தில் ரன் கொடுக்காமல் 2வது ப்ரேவிஸை 31 (16) ரன்களில் அவுட்டாக்கினார். அடுத்து வந்த கோர்பின் போஸ் 2, 1 ரன்கள் எடுத்த நிலையில் 5வது பந்தில் ஜார்ஜ் லிண்டே 10 (10) ரன்களில் அவுட்டானார். கடைசி பந்தில் 4 ரன்னில் தேவைப்பட்ட போது முத்துசாமிக்கு எதிராக ஹென்றி டாட் பந்தை வீசினார்.

இதையும் படிங்க: பவுண்டரி லைனில் நின்ற முகமது சிராஜை வார்த்தைகளால் வசைபாடிய இங்கிலாந்து ரசிகர்கள் – என்ன நடந்தது?

அதனால் 20 ஓவரில் தென்னாபிரிக்காவை 177/6 ரன்களுக்கு கட்டுப்படுத்திய நியூஸிலாந்து வெறும் 3 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று கோப்பையை தட்டிச் சென்றது. அந்த அணிக்கு அதிகபட்சமாக 2 விக்கெட்டுகள் எடுத்து கைமீறிய வெற்றியைப் பறித்த ஹென்றி ஆட்டநாயகன் விருதை வென்றார். மறுபுறம் கடைசி ஓவரில் 7 ரன்களை அடிக்க முடியாத தென்னாப்பிரிக்கா சோக் செய்து கோப்பையை கோட்டை விட்டது

Advertisement