பவுண்டரி லைனில் நின்ற முகமது சிராஜை வார்த்தைகளால் வசைபாடிய இங்கிலாந்து ரசிகர்கள் – என்ன நடந்தது?

Siraj
- Advertisement -

மான்செஸ்டர் நகரில் உள்ள ஓல்டு டிராபோர்டு மைதானத்தில் கடந்த ஜூலை 23-ஆம் தேதி துவங்கிய இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது இன்று நான்காம் ஆட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் விளையாடிய இந்திய அணியானது தங்களது முதல் இன்னிங்சில் 358 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

முகமது சிராஜை விமர்சித்த இங்கிலாந்து ரசிகர்கள் :

பின்னர் தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணியானது இந்திய பவுலர்கள் பந்துவீச்சை மிக எளிதாக எதிர்கொண்டு எவ்வித சிரமுமின்றி தங்களது முதல் இன்னிங்சில் 669 ரன்களை குவித்ததால் 311 ரன்கள் பின்தங்கிய நிலையுடன் தற்போது இந்திய அணியானது தங்களது இரண்டாவது இன்னிங்சை விளையாடி வருகிறது.

- Advertisement -

தற்போதைய நான்காம் நாள் ஆட்டத்தின் தேநீர் இடைவேளை வரை இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 86 ரன்களை குவித்துள்ள வேளையில் இன்னும் 225 ரன்கள் பின்தங்கியுள்ளது. இதன் காரணமாக இந்த போட்டியில் இங்கிலாந்த அணியின் வெற்றி வாய்ப்பு அதிகரித்துள்ளது.

ஏற்கனவே இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் முன்னிலை வகித்துள்ளதால் அந்த அணி இந்த தொடரை கைப்பற்றும் அற்புதமான வாய்ப்பு காத்திருக்கிறது. ஆனால் அதனை தடுத்து நிறுத்தும் விதமாக இந்திய அணி டிராவை நோக்கி இந்த போட்டியை கொண்டு சென்று கொண்டிருக்கிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் பவுண்டரி லைனில் பீல்டிங் செய்யும்போது இங்கிலாந்து ரசிகர்கள் அனைவரும் அவரை நோக்கி கை அசைத்து அவரை வார்த்தைகளால் வசைபாடினார். இதற்கு காரணம் யாதெனில் : களத்தில் எப்போதும் முழு உத்வேகத்துடன் இருக்கும் முகமது சிராஜ் அவ்வப்போது இங்கிலாந்து வீரர்களை சீண்டினார்.

இதையும் படிங்க : உலகளவில் 3 ஆவது வீரராக பென் ஸ்டோக்ஸ் நிகழ்த்திய சரித்திர சாதனை – விவரம் இதோ

அவர் எப்போது பந்து வீசினாலும் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் அருகில் சென்று அவர்களை சீண்டும் வகையில் ஆக்ரோஷமாக வார்த்தை மோதலில் ஈடுபடுவதால் அவரை விமர்சித்து ரசிகர்கள் அனைவரும் அவரை பவுண்டரி லைனில் பீல்டிங் செய்யும்போது வசை பாடியது குறிப்பிடத்தக்கது.

Advertisement