இந்திய அணிக்கு எதிராக நடைபெற்று வரும் நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணியானது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தற்போது வெற்றியை நோக்கி பயணித்து வருகிறது. ஏற்கனவே இந்த தொடரில் முதல் மூன்று ஆட்டங்கள் முடிவடைந்த வேளையில் இங்கிலாந்து அணியானது தற்போதைய நிலையில் இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
பென் ஸ்டோக்ஸ் நிகழ்த்திய சரித்திர சாதனை :
அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியானது கடந்த ஜூலை 23-ஆம் தேதி மான்செஸ்டர் நகரில் உள்ள ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ் முதலில் தங்களது அணி பந்து வீசுவதாக அறிவித்தார்.
அதனை தொடர்ந்து முதல் இன்னிங்க்ஸை விளையாடிய இந்திய அணியானது தங்களது முதல் இன்னிங்சில் 358 ரன்கள் குவிக்க அடுத்ததாக விளையாடிய இங்கிலாந்து அணி 669 ரன்களை குவித்தது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி சார்பாக அதிகபட்சமாக ஜோ ரூட் 150 ரன்களையும், பென் ஸ்டோக்ஸ் 141 ரன்களையும் குவித்தனர்.
இந்த போட்டியில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய அந்த அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பந்துவீசுகையில் 24 ஓவர்களை வீசி 72 ரன்களை விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அதனை தொடர்ந்து முதல் இன்னிங்சில் ஆறாவது வீரராக பேட்டிங் செய்ய வந்த அவர் 198 பந்துகளை சந்தித்து 11 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் என 141 ரன்கள் குவித்து அசத்தினார்.
இப்படி பந்துவீச்சில் 5 விக்கெட்டுகளையும், பேட்டிங்கில் சதமும் அடித்த அவர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் உலக அளவில் மூன்றாவது வீரராக ஒரு மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளார். அந்த வகையில் சாதனை பென் ஸ்டோக்ஸ் நிகழ்த்திய சாதனை யாதெனில் :
இதையும் படிங்க : டெஸ்ட் கரியரில் முதன்முறையாக சறுக்கலை சந்தித்த பும்ரா.. மோசமான சாதனை – விவரம் இதோ
இதுவரை டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே இரண்டு வீரர்கள் மட்டுமே டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 7000 ரன்கள் மற்றும் மேலும் 200 விக்கெட்டுகளுக்கு மேல் குவித்துள்ளனர். அந்த வகையில் கேரி சோபர்ஸ் 8032 ரன்கள் மற்றும் 235 விக்கெட்டுகள், அவருக்கு அடுத்து ஜாக் காலிஸ் 13,289 ரன்கள் 292 விக்கெட்டுகள் எடுத்துள்ள வேளையில் தற்போது மூன்றாவது வீரராக பென் ஸ்டோக்ஸ் 7000 ரன்கள் மற்றும் 229 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.



