இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது மான்செஸ்டர் நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த ஜூலை 23-ஆம் தேதி துவங்கிய இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணி தங்களது முதல் இன்னிங்சில் 358 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
டெஸ்ட் கரியரில் முதல் முறையாக பும்ரா படைத்த மோசமான சாதனை :
இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக சாய் சுதர்சன் 61 ரன்களையும், யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 58 ரன்களையும், ரிஷப் பண்ட் 54 ரன்களையும் குவித்தனர். பின்னர் தொடர்ந்து தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடிய இங்கிலாந்து அணியானது இன்றைய மூன்றாம் நாள் ஆட்டநேரத்தில் 669 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இங்கிலாந்து அணி சார்பாக அதிகபட்சமாக ஜோ ரூட் 150 ரன்களையும், பென் ஸ்டோக்ஸ் 141 ரன்களையும் குவித்து அசத்தினர். அதனை தொடர்ந்து தற்போது 311 ரன்கள் பின்தங்கிய நிலையுடன் இந்திய அணியானது தங்களது இரண்டாவது இன்னிங்ஸ்சை விளையாடி வருகிறது.
இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணிக்காக விளையாடிய முன்னணி நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா தனது ஒட்டுமொத்த டெஸ்ட் கிரிக்கெட் கரியரிலேயே முதல் முறையாக ஒரு மோசமான தடுமாற்றத்தை சந்தித்துள்ளார்.
அதாவது கடந்த 2018-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான அவர் இதுவரை 47 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள வேளையில் எந்த ஒரு இன்னிங்சிலும் அவர் 100 ரன்களை விட்டுக் கொடுத்தது கிடையாது. ஆனால் இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த போட்டியில் மொத்தம் 33 ஓவர்களை வீசிய அவர் 112 ரன்களை விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.
இதையும் படிங்க : ரூட் உலக சாதனையை உடைச்சாலும் சச்சின் தான் பெஸ்ட்.. 10 பேரை சொல்லுங்க பாக்கலாம்.. கெவின் பீட்டர்சன்
இதன் மூலம் தனது டெஸ்ட் கரியரில் முதல் முறையாக ஒரு இன்னிங்சில் 100 ரன்களுக்கு மேல் வழங்கி ஒரு பெரிய தடுமாற்றத்தை இந்த போட்டியில் சந்தித்துள்ளார். இதற்கு அடுத்து நடைபெறயிருக்கும் கடைசி போட்டியில் அவர் விளையாட மாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.



