281 ரன்ஸ்.. தங்களை மதிக்காத தெ.ஆ அணியை தூளாக்கிய நியூஸிலாந்து.. 30 வருட மாபெரும் சாதனை வெற்றி

NZ vs RSA
- Advertisement -

நியூஸிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா அங்கு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் இந்த தொடரில் ரபாடா உள்ளிட்ட முக்கிய தென்னாபிரிக்க வீரர்கள் எஸ்ஏ20 டி20 தொடரில் விளையாடுவதால் களமிறங்கவில்லை. குறிப்பாக நாட்டை விட டி20 கிரிக்கெட்டில் கிடைக்கும் பணமே முக்கியம் என்று முடிவெடுத்த தென்னாப்பிரிக்கா இத்தொடரில் இளம் வீரர்களைக் கொண்ட இரண்டாவது தர அணியை களமிறக்கியது.

அதற்கு தங்களை மதிக்காத தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்த தொடரில் நியூசிலாந்து விளையாடக் கூடாது என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் கடுமையாக விமர்சித்திருந்தார். அந்த நிலையில் பிப்ரவரி 4ஆம் தேதி மவுண்ட் மௌங்கனி நகரில் துவங்கிய இத்தொடரின் முதல் போட்டியில் கேப்டன் நெயில் பிராண்ட் உட்பட இதற்கு முன் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடாத 6 வீரர்கள் அறிமுகமாக களமிறங்கினார்கள்.

- Advertisement -

மாபெரும் வெற்றி:
அதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய தென்னாபிரிக்கா முதல் இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடிய 511 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரச்சின் ரவீந்தரா இரட்டை சதமடித்து 240 கேன் வில்லியம்சன் சதமடித்து 118 ரன்கள் எடுக்க தென்னாபிரிக்கா சார்பில் அதிகபட்சமாக கேப்டன் நெய்ல் பிராண்ட் 6 விக்கெட்டுகள் எடுத்தார்.

அதைத்தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா எதிர்பார்க்கப்பட்டதை போலவே நியூசிலாந்தின் தரமான பந்து வீச்சில் 162 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக கீகன் பீட்டர்சன் 45, டேவிட் பேடிங்கம் 32 ரன்கள் எடுக்க நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக மாட் ஹென்றி, மிட்சேல் சான்ட்னர் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

- Advertisement -

அதன் பின் 349 ரன்கள் பின்தங்கிய நிலையில் களமிறங்கிய நியூசிலாந்து 179/4 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக கேன் வில்லியம்சன் மீண்டும் சதமடித்து 109 ரன்கள் எடுக்க தென்னாப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக கேப்டன் நெய்ல் பிராண்ட் 2 விக்கெட்டுகள் எடுத்தார். இறுதியில் 529 என்ற மெகா இலக்கை துரத்திய தென்னாப்பிரிக்கா முடிந்தளவுக்கு போராடியும் 247 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இதையும் படிங்க: சரியான நேரத்தில் சுப்மன் கில் செய்த சம்பவம்.. எஞ்சியுள்ள போட்டிகளில் விளையாட கிடைத்த லக் – விவரம் இதோ

அதிகபட்சமாக டேவிட் பேடிங்கம் 87 ரன்கள் எடுக்க நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக கெய்ல் ஜமிசன் 4, மிட்சேல் சான்ட்னர் 3 விக்கெட்களை எடுத்தனர். அதன் காரணமாக 281 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற நியூஸிலாந்து 1 – 0* (2) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. அத்துடன் இதன் வாயிலாக 2வது தர அணியை அனுப்பி தங்களை மதிக்காத தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் ரன்கள் அடிப்படையில் தங்களின் மிகப்பெரிய வெற்றியை (281 ரன்கள்) பதிவு செய்து நியூசிலாந்து சாதனையும் படைத்தது. இதற்கு முன் கடந்த 30 வருடங்களுக்கு முன்பாக 1994ஆம் ஆண்டு ஜோஹன்ஸ்பர்க் நகரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 137 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதே நியூசிலாந்தின் முந்தைய பெரிய வெற்றியாகும்.

Advertisement