6,6,4,4.. 99 ரன்ஸ்.. 24 வயது வீரர் தனித்துவ சாதனை.. இளம் நியூஸிலாந்து அணியிடம் ஃசெல்ப் எடுக்காமல் தோற்ற பாகிஸ்தான்

- Advertisement -

பாகிஸ்தானுக்கு எதிராக தங்களது சொந்த மண்ணில் முதலில் விளையாடிய 5 போட்டிகளைஜ் கொண்ட டி20 தொடரை 4 – 1 என்ற கணக்கில் நியூசிலாந்து வென்றது. அடுத்ததாக நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியிலும் வென்ற நியூசிலாந்து ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அதைத்தொடர்ந்து வெற்றியாளரை தீர்மானிக்கும் முக்கியமான இரண்டாவது போட்டி ஏப்ரல் இரண்டாம் தேதி ஹமில்டன் நகரில் நடைபெற்றது.

இந்திய நேரப்படி அதிகாலை 3.30 மணிக்கு துவங்கிய அந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து 50 ஓவரில் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி 292-8 ரன்களை குவித்து அசத்தியது. அந்த அணிக்கு ரைஸ் மரியூ 18, நிக் கேலி 31, ஹென்றி நிகோலஸ் 22, டேரில் மிட்சேல் 18, கேப்டன் மைக்கேல் பிரேஸ்வெல் 18 என டாப் பேட்ஸ்மேன்கள் கணிசமான ரன்கள் எடுத்தனர்.

- Advertisement -

தவறிய சதம்:

அதனால் 132-5 என நியூசிலாந்து தடுமாறிய போது மிடில் ஆர்டரில் நங்கூரமாக விளையாடிய 44 ரன்கள் எடுத்தா. அவருடன் அபாரமாக பேட்டிங் செய்த விக்கெட் கீப்பர் மிட்சேல் ஹே 7 பவுண்டரி 7 சிக்ஸருடன் 99* (78) ரன்கள் எடுத்து நல்ல ஃபினிஷிங் செய்தார். குறிப்பாக கடைசி 4 பந்துகளில் 6, 6, 4, 4 என அடுத்தடுத்த பௌண்டரிகள் எடுத்தும் அவரால் 100 ரன்களை தொட முடியவில்லை.

இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் அவுட்டாகாமல் 99* ரன்கள் எடுத்த முதல் நியூஸிலாந்து மற்றும் உலகளவில் 3வது விக்கெட் கீப்பர் என்ற சாதனையை மிட்சேல் படைத்துள்ளார். இதற்கு முன் ஜிம்பாப்வே ஜாம்பவான் ஆன்டி ஃபிளவர் 1999ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 99* ரன்கள் எடுத்துள்ளார். அமீரக அணியின் விக்கெட் கீப்பர் ஸ்வப்னில் பாட்டில் 2014இல் ஸ்காட்லாந்துக்கு எதிராக 99* ரன்கள் எடுத்துள்ளார்.

- Advertisement -

பாகிஸ்தான் பரிதாபம்:

பாகிஸ்தானுக்கு அதிகபட்சமாக சூபியன் முஹீம் 2, முகமத் வாசிம் 2 விக்கெட்டுகள் எடுத்தனர். அடுத்ததாக விளையாடிய பாகிஸ்தானுக்கு சபிக் 1, இமாம்-உல்-ஹக் 3, பாபர் அசாம் 1, கேப்டன் ரிஸ்வான் 5, சல்மான் ஆகா 9, டாயப் தாஹிர் 13 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் 65-6 என ஆரம்பத்திலேயே திணறிய பாகிஸ்தானுக்கு பாஹீம் அஸ்ரப் 73, நாசீம் ஷா 51 ரன்கள் எடுத்து போராடி அவுட்டானார்கள்.

இதையும் படிங்க: தம்பி இதெல்லாம் உனக்கு தேவையா? இப்படியெல்லாம் செய்யக்கூடாது.. எச்சரிக்கையுடன் தண்டிக்கப்பட்ட லக்னோ வீரர்

இறுதியில் 41.2 ஓவரில் 208 ரன்களுக்கு பாகிஸ்தானை ஆல் அவுட்டாக்கிய நியூஸிலாந்து 84 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதனால் 2 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே நியூசிலாந்து தொடரை வென்றுள்ளது. குறிப்பாக இளம் வீரர்களைக் கொண்ட நியூசிலாந்து பாபர் அசாம், ரிஸ்வான் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் அடங்கிய வலுவான பாகிஸ்தானை மண்ணை கவ்வ வைத்துள்ளது. அந்த அணிக்கு அதிகபட்சமாக பேன் சீர்ஸ் 5, ஜேக்கப் டுபி 3 விக்கெட்டுகளை எடுத்தனர்.

Advertisement