- Advertisement -
உலக கிரிக்கெட்

42 வருடங்கள் கழித்து பஸ்பால் இங்கிலாந்தை மொத்தமாக சாய்த்த.. நியூஸிலாந்து சாதனை வெற்றி

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து முதலில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் தொடரை 1 – 0 (3) என்ற கணக்கில் மழைக்கு மத்தியில் வென்றது. அடுத்து நடைப்பெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் 2 போட்டிகளில் வென்ற நியூசிலாந்து ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றியது. இறுதியாக சம்பிரதாய கடைசிப் போட்டி நவம்பர் ஒன்றாம் தேதி வெலிங்டன் நகரில் இந்திய நேரப்படி அதிகாலை 6.30 மணிக்கு நடைபெற்றது.

அப்போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து மீண்டும் தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 40.2 ஓவரில் 222 ரன்கள் அடித்து ஆல் அவுட்டானது. அந்த அணிக்கு ஜேமி ஸ்மித் 5, பென் டக்கெட் 8, ஜோ ரூட் 2 கேப்டன் ஹரி ப்ரூக் 6, ஜேக்கப் பேத்தல் 11 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்கள்.

- Advertisement -

சொதப்பிய பஸ்பால்:

அதனால் 44/5 என ஆரம்பத்திலேயே சரிந்த இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 38, ஜேமி ஓவர்டன் 68, பிரைடன் கார்ஸ் 36 ரன்கள் அடித்து ஓரளவு காப்பாற்றினர். நியூசிலாந்துக்கு அதிகபட்சமாக பிளைர் டிக்னர் 4, ஜேக்கப் டுபி 3, ஜக்காரி போல்க்ஸ் 2 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்கள். அடுத்ததாக சேசிங் செய்த நியூசிலாந்துக்கு 78 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த டேவோன் கான்வே நல்ல துவக்கத்தைக் கொடுத்து 34 ரன்னில் ரன் அவுட்டானார்.

அவருடன் இணைந்து அதிரடியாக விளையாடிய ரச்சின் ரவீந்தரா 46 (37) ரன்னில் போல்டானார். அடுத்து வந்த வில் எங் 1, டாம் லாதம் 10, மைக்கேல் பிரேஸ்வெல் 13 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர். ஆனால் டேரில் மிட்சேல் பொறுப்புடன் விளையாடி 44 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார்.

- Advertisement -

1983க்குப்பின் ஒய்ட்வாஷ் வெற்றி’

இறுதியில் கேப்டன் மிட்சேல் சான்ட்னர் 27, ஜக்காரி போல்க்ஸ் 14*, பிளைர் டிக்னர் 18* ரன்கள் அடித்தனார். அதனால் 44.4 ஓவரில் 226/8 ரன்களை எடுத்த நியூசிலாந்து 2 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்றது. அதனால் இத்தொடரின் கோப்பையை 3 – 0 (3) என்ற கணக்கில் இங்கிலாந்தை ஒயிட்வாஸ் செய்து நியூசிலாந்து வென்றது.

இதையும் படிங்க: ஐசிசி மகளிர் உ.கோ ஃபைனல்: 2011 மேஜிக் திரும்புமா? இந்தியா – தெ.ஆ வரலாற்று புள்ளிவிவரம்.. பிட்ச் – வெதர் ரிப்போர்ட்

இதன் வாயிலாக 42 வருடங்கள் கழித்து ஒரு ஒருநாள் தொடரை இங்கிலாந்தை ஒய்ட்வாஸ் செய்து நியூசிலாந்து சாதனை வெற்றி பெற்றுள்ளது. கடைசியாக 1983ஆம் ஆண்டு ஜெப் ஹோவார்த் தலைமையிலான நியூசிலாந்து பாப் வில் தலைமையிலான இங்கிலாந்தை 3 – 0 (3) தங்களது சொந்த மண்ணில் தோற்கடித்திருந்தது. மறுபுறம் டெஸ்ட் கிரிக்கெட்டிலேயே பஸ்பால் என்ற பெயரில் அதிரடியாக விளையாடுகிறோம் என்று சொல்லக்கூடிய இங்கிலாந்து இத்தொடரில் ஒரு வெற்றி கூட பெற முடியாமல் மொத்தமாக சாய்ந்தது.

- Advertisement -