ஐசிசி 2025 மகளிர் உலகக் கோப்பையின் மாபெரும் இறுதிப்போட்டி நவம்பர் 2ஆம் தேதி இந்தியாவில் உள்ள நவி மும்பையில் மதியம் 3.00 மணிக்கு நடைபெறுகிறது. அப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியை இந்தியா தங்களது சொந்த மண்ணில் எதிர்கொள்கிறது. கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்த அத்தொடரில் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தை பிடித்த தென்னாப்பிரிக்கா செமி ஃபைனலில் இங்கிலாந்தை தோற்கடித்து ஃபைனலுக்கு தகுதி பெற்றது.
4வது இடத்தைப் பிடித்த இந்தியா செமி ஃபைனலில் வலுவான நடப்புச் சாம்பியன் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து ஃபைனலுக்கு வந்துள்ளது. குறிப்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 339 ரன்களை வெற்றிகரமாக சேசிங் செய்த இந்தியா உலக சாதனை வெற்றியுடன் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. வரலாற்றில் தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியா ஆகிய 2 அணிகளுமே ஒருமுறை கூட மகளிர் உலகக் கோப்பையை வென்றதில்லை.
2011 மேஜிக் மீண்டும் நிகழுமா:
எனவே இம்முறை புதிதாக கிரிக்கெட்டின் உலக சாம்பியன் பட்டத்தை வெல்லப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் காணப்படுகிறது. குறிப்பாக 2011 உலகக் கோப்பையை தோனி தலைமையில் 28 வருடங்கள் கழித்து சொந்த மண்ணில் வென்று இந்தியா சாதனை படைத்தது. அதே போல இம்முறை சொந்த ரசிகர்களின் ஆதரவுடன் ஹர்மன்ப்ரீத் கௌர் தலைமையில் மகளிர் இந்திய அணி கோப்பையை வெல்லுமா என்பது கோடிக்கணக்கான ரசிகர்களின் எண்ணமாக இருக்கிறது.
மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியா – தென்னாபிரிக்கா அணிகள் 34 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் இந்தியா 20, தென்னாப்பிரிக்கா 13 வெற்றிகள் பெற்றுள்ளன. 1 போட்டி மழையால் கைவிடப்பட்டது. ஐசிசி மகளிர் உலகக் கோப்பை வரலாற்றில் இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகள் 6 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் இரு அணிகளும் தலா 3 வெற்றிகளை பற்றி சம பலத்துடன் இருக்கின்றன. இருப்பினும் கடைசியாக விளையாடிய 3 உலகக் கோப்பை போட்டிகளில் தென்னாப்பிரிக்காவை தோற்கடித்து இந்தியா அசத்தியுள்ளது.
வெதர் ரிப்போர்ட்:
நவிமும்பையில் நவம்பர் 2ஆம் தேதி 20 – 30% மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவிக்கிறது. பெரும்பாலான நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்று தெரியவருகிறது. ஏற்கனவே ஐசிசி ரிசர்வ் நாளை ஒதுக்கியுள்ளதால் இப்போட்டி மழையால் பாதிக்க அதிக வாய்ப்பில்லை என்றே சொல்லலாம்.
பிட்ச் ரிப்போர்ட்:
நவி மும்பையில் இருக்கும் டிஒய் பாட்டில் கிரிக்கெட் மைதானத்தின் பிட்ச் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருந்து வருகிறது. அதனாலேயே கடந்தப் போட்டியில் இந்தியா 339 ரன்களை சேசிங் செய்து உலக சாதனை படைத்தது. மேலும் இங்கே இந்தியா 3 முறை 300+ ரன்கள் அடித்து அசத்தியுள்ளது.
எனவே இறுதிப் போட்டியிலும் பிட்ச் பேட்டிங் செய்ய சாதகத்தைக் கொடுக்கும் என்று நம்பலாம். சூழ்நிலைகளை மதித்து நங்கூரமாக விளையாடும் பேட்டர்கள் பெரிய ரன்கள் அடிக்க முடியும். நேரம் செல்ல செல்ல ஸ்பின்னர்கள் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். வேகப்பந்துவீச்சாளர்களும் வேகப்பந்து வீச்சாளர்களும் புதிய பந்தில் சவாலைக் கொடுப்பார்கள்.
இதையும் படிங்க: இப்படியே எல்லாத்தையும் மாத்துனா இந்தியா ஜெய்க்க வாய்ப்பில்லை.. சாம்சனை ஏன் அலைய விடுறிங்க.. பதான் விளாசல்
இங்கு சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 220. இப்போட்டியில் மழை மற்றும் இரவு நேரத்தில் பனி பொழிய வாய்ப்பு இருக்கிறது. அவற்றைக் கருத்தில் கொண்டு டாஸ் வெல்லும் கேப்டன் சேசிங் செய்யும் முடிவை தீர்மானிப்பது வெற்றிக்கு வைத்து விடலாம்.



