NZ vs SL : வீடியோ – கடைசி பந்தில் நிகழ்ந்த பரபரப்பு, காப்பாற்றிய வில்லியம்சன் – இந்தியா ஃபைனலுக்கு தகுதி பெற்றதா?

- Advertisement -

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அங்கு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் களமிறங்கியுள்ளது. வரும் ஜூன் மாதம் லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை நடப்பு சாம்பியனாக இருக்கும் நியூசிலாந்து ஏற்கனவே இழந்து விட்டது. ஆனால் புள்ளி பட்டியலில் 3வது இடத்தில் இருக்கும் இலங்கை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அகமதாபாத் நகரில் நடைபெறும் 4வது போட்டியில் இந்தியா தோற்கும் என்ற நம்பிக்கையுடன் 2 – 0 (2) என்ற கணக்கில் இத்தொடரில் நியூசிலாந்தை தோற்கடித்து ஃபைனலுக்கு செல்லும் லட்சியத்துடன் களமிறங்கியது. அந்த நிலையில் மார்ச் 9ஆம் தேதியன்று கிறிஸ்ட்சர்ச் நகரில் துவங்கிய முதல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை சிறப்பாக செயல்பட்டு 355 ரன்கள் குவித்தது.

அந்த அணிக்கு கேப்டன் கருணரத்னே 50, குசால் மெண்டிஸ் 87 என முக்கிய வீரர்கள் தேவையான ரன்களை எடுக்க நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக டிம் சவுதி 5 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்துக்கு டேவோன் கான்வே 30, டாம் லாதம் 67 என தொடக்க வீரர்கள் நல்ல ரன்களை எடுத்தாலும் கேன் வில்லியம்சன் 1, ஹென்றி நிக்கோலஸ் 2, டாம் ப்ளண்டல் 7 என மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

- Advertisement -

அதனால் 151/5 என சரிந்த நியூசிலாந்தை மிகச் சிறப்பாக பேட்டிங் செய்து காப்பாற்றிய டார்ல் மிட்சேல் சதமடித்து 102 ரன்களும் சௌதீ 24, மாட் ஹென்றி 72, நெய்ல் வாக்னர் 27 என டெயில் எண்டர்கள் முக்கிய ரன்களை எடுத்து காப்பாற்றினார்கள். அதன் காரணமாக தப்பிய நியூசிலாந்து 373 ரன்கள் எடுத்த நிலையில் இலங்கை சார்பில் அதிகபட்சமாக அசிதா பெர்னாண்டோ 4 விக்கெட் எடுத்தார். அதைத் தொடர்ந்து 18 ரன்கள் பின்தங்கிய நிலையில் களமிறங்கிய இலங்கைக்கு பெர்னாண்டோ 28, கருணரத்னே 17, குசால் மெண்டிஸ் 14 என முக்கிய பேட்ஸ்மேன் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளித்தனர்.

இருப்பினும் அனுபவத்தை காட்டிய அஞ்சுலோ மேத்யூஸ் சதமடித்து 115 ரன்கள் எடுக்க டீ சில்வா 47*, சண்டிமல் 42 என மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நல்ல ரன்களை குவித்தனர். அதனால் இலங்கை 302 ரன்கள் எடுத்த நிலையில் நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக ப்ளாக் டிக்னர் 4 விக்கெட்டுகளை சாய்ந்தார். இறுதியில் 285 என்ற கடினமான இலக்கை துரத்திய டேவோன் கான்வே 5 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றிய நிலையில் இன்றைய கடைசி நாளில் வெற்றிக்கு 257 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் அகமதாபாத் நகரில் பிளாட்டான பிட்ச்சில் ஆஸ்திரேலிய – இந்திய அணிகள் போட்டி போட்டுக்கொண்டு தங்களது முதல் இன்னிங்ஸை முடிப்பதற்கு 4 நாட்கள் முடிந்தது.

- Advertisement -

அதனால் இந்தியா டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெற இப்போட்டியில் நியூசிலாந்து வென்றாக வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அந்த நிலைமையில் இன்று துவங்கிய கடைசி நாள் ஆட்டம் ஆரம்பத்திலேயே மழையால் 25 ஓவர்களுக்கு மேல் பாதிக்கப்பட்டது இந்திய ரசிகர்களை மீண்டும் கலக்கமடைய வைத்தது. ஆனால் உணவு இடைவெளிக்கு பின் மழை ஒதுங்கியதும் பேட்டிங்கை துவங்கிய நியூசிலாந்துக்கு டாம் லாதம் 24, ஹென்றி நிக்கோலஸ் 20 என முக்கிய வீரர்களை குறைந்த ரன்களில் அவுட்டாக்கி இலங்கை மிரட்டலை கொடுத்தது.

ஆனாலும் அதற்கு வளைந்து கொடுக்காமல் 4வது விக்கெட்டுக்கு மீண்டும் நங்கூரத்தை போட்ட டார்ல் மிட்சேல் கேன் வில்லியம்சனுடன் இணைந்து 142 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து தோல்வியை தவிர்த்து 3 பவுண்டரை 4 சிக்சருடன் 84 (81) ரன்கள் விளாசி அவுட்டானார். அவருடன் அசத்தலாக செயல்பட்ட கேன் வில்லியம்சன் சதமடித்ததால் நியூசிலாந்து வெற்றியை நெருங்கினாலும் கடைசி நேரத்தில் டாம் பிளான்டல் 3, மைக்கேல் பிரேஸ்வெல் 10, டிம் சௌதீ 1 என லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்களை சொற்ப ரன்களில் காலி செய்த இலங்கை போராடியது.

- Advertisement -

கூடவே கடைசி நாளில் கடைசி ஓவர் வந்ததால் கடைசி 6 பந்துகளில் 8 ரன்கள் தேவைப்பட்ட போது மாட் ஹென்றி 4 ரன்களில் ரன் அவுட்டானதால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் அடுத்த பந்தில் பவுண்டரி அடித்த வில்லியம்சன் கடைசி பந்தில் 1 ரன் தேவைப்பட்ட போது டைவ் அடித்து சிங்கிள் எடுத்து 11 பவுண்டரி 1 சிக்சருடன் 121* ரன்கள் குவித்து சூப்பர் பினிஷிங் கொடுத்ததால் நியூசிலாந்து வெறும் 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

இதையும் படிங்க:வீடியோ : ஷேன் வார்னே போல் மேஜிக் பந்தால் க்ளீன் போல்ட்டாக்கிய ஹர்பஜன், உறைந்து போன கெயில் – வியந்த உத்தப்பா

அதனால் அகமதாபாத் போட்டி முடிவடைவதற்கு முன்பாகவே 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் ஆஸ்திரேலியாவுடன் மோதுவதற்கு இந்தியா அதிகாரப்பூர்வமாக தகுதி பெற்றதால் இலங்கை ஏமாற்றத்தை சந்தித்துள்ளது.

Advertisement