டாஸ் போட்ட அப்றம் ப்ளேயிங் லெவல் செலக்ட் பண்ணலாம் – ஐபிஎல் 2023 தொடரில் அறிமுகமாகும் 4 புதிய ரூல்ஸ் இதோ

csk vs rcb
Advertisement

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் தொடரின் 16வது சீசன் வரும் மார்ச் 31 முதல் அகமதாபாத் நகரில் கோலாகலமாக துவங்குகிறது. மொத்தம் 10 அணிகள் 74 போட்டிகளில் கோப்பையை வெல்ல பலப்பரீட்சை நடத்தும் இந்த சீசனின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத்தை முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர்கொள்கிறது. முன்னதாக கடந்த 2008ஆம் ஆண்டு 8 அணிகளுடன் சாதாரண டி20 கிரிக்கெட் தொடராக துவங்கப்பட்ட ஐபிஎல் கடந்த 15 வருடங்களில் பல பரிணாமங்களை கண்டு தரத்திலும் பணத்திலும் இன்று சர்வதேச கிரிக்கெட்டின் தலையெழுத்து தீர்மானிக்கும் அளவுக்கு உலகின் நம்பர் ஒன் தொடராக விஸ்வரூபம் எடுத்துள்ளதை அனைவரும் அறிவோம்.

அதற்கு போட்டியாக உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு நாடுகளில் துவங்கப்பட்டுள்ள டி20 தொடர்களில் ரசிகர்களை கவரும் வகையில் நிறைய புதிய விதிமுறைகளும் அறிமுகப்படுத்தப்பட்டாலும் அந்தத் தொடர்களால் ஐபிஎல் உச்சத்தை எட்ட முடியவில்லை. இருப்பினும் காலத்தின் வளர்ச்சிக்கேற்ப தொடர்ந்து நம்பர் ஒன் இடத்தில் ஜொலிப்பதற்கும் ரசிகர்களை கவரும் வகையிலும் 2023 ஐபிஎல் தொடரில் சில புதிய விதிமுறைகளை பிசிசிஐ கொண்டு வர உள்ளது. தற்போது பிரபல இணையத்தில் வெளியாகியுள்ள இந்த செய்தியை விரைவில் பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அவைகளைப் பற்றி பார்ப்போம்:

- Advertisement -

1. டாஸ் வென்ற பின்: சர்வதேச கிரிக்கெட்டை போலவே இதுவரை ஐபிஎல் தொடரிலும் டாஸ் வீசுவதற்கு முன்பாக விளையாடும் 11 பேர் அணி வீரர்களை தேர்வு செய்து எதிரணி கேப்டன் மற்றும் நடுவரிடம் ஒப்படைக்கும் நடைமுறை இருந்து வருகிறது. ஆனால் 2023 சீசனில் இருந்து டாஸ் வீசிய பின் விளையாடும் 11 பேர் அணியில் தேர்வு செய்து கொள்ளும் புதிய விதிமுறையை பிசிசிஐ அறிமுகப்படுத்துகிறது.

csk-vs-mi

சமீப காலங்களாகவே டாஸ் வென்றால் வெற்றியும் உறுதி என்ற நிலைமை டி20 கிரிக்கெட்டில் இருப்பதை மாற்றி சமநிலையுடன் கூடிய போட்டியை ஏற்படுத்துவதற்காக கடந்த ஜனவரியில் தென்னாப்பிரிக்க டி20 தொடரில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த விதிமுறை வெற்றிகரமாக செயல்பட்டதால் ஐபிஎல் தொடரிலும் கொண்டு வரப்பட உள்ளது.

- Advertisement -

எடுத்துக்காட்டாக டாஸ் வென்ற அணி பிட்ச் மெதுவாக இருப்பதால் முதலில் பேட்டிங் தேர்வு செய்யும் பட்சத்தில் பந்து வீசும் போது ரன்களை கட்டுப்படுத்துவதற்காக எக்ஸ்ட்ரா ஸ்பின்னரை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அதாவது டாஸ் வென்ற பின் பேட்டிங் அல்லது பவுலிங் என எந்த முடிவு எடுத்தாலும் அதற்கேற்றார் போல் தேவையான 11 பேர் அணியை தேர்வு செய்து கொள்ளலாம்.

cskvsmi

முன்னதாக ஏற்கனவே இம்பேக்ட் பிளேயர் எனும் விதிமுறையையும் இந்த ஐபிஎல் தொடரில் பிசிசிஐ அறிமுகப்படுத்தியுள்ளது ரசிகர்களுக்கு நினைவிருக்கலாம். அதாவது போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது ஒரு குறிப்பிட்ட சமயத்தில் 11 பேர் அணியில் இடம் பிடிக்காத ஒரு வீரர் விளையாடினால் வெற்றி பெறலாமே என்று நினைக்கும் வீரரை அந்த அணி நிர்வாகம் பயன்படுத்தலாம்.

- Advertisement -

அந்த வீரரை டாஸ் வீசும் போதே 4 வீரர்கள் கொண்ட உத்தேச பட்டியலை நடுவரிடம் ஒப்படைத்து அதிலிருந்து விதிமுறைகளுக்கு உட்பட்டு குறிப்பிட்ட ஓவருக்கு முன்பாக தேவைப்படும் நேரத்தில் நடுவரிடம் சொல்லிவிட்டு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று பிசிசிஐ தெரிவித்திருந்தது. அந்த விதிமுறையுடன் தற்போது இந்த விதிமுறையும் புதிதாக சேர்க்கப்பட உள்ளது.

IPL Umpires

2. பெனால்டி: அத்துடன் பந்து வீசும் போது கவனத்தை திசை திருப்பும் வகையில் விக்கெட் கீப்பர் அசைந்தால் அந்த பந்து டெட் பால் என அறிவிக்கப்பட்டு அந்த அணிக்கு 5 ரன்கள் பெனால்டியாக கொடுக்கும் விதிமுறையும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

- Advertisement -

3. ஃபேக் ஃபீல்டிங்: அதே போலவே பந்து வீசும் போது களத்தில் இருக்கும் ஏதேனும் ஃபீல்டர்கள் பேட்ஸ்மேன்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில் நடந்து கொண்டால் அந்த பந்தும் டெட் பால் என அறிவிக்கப்பட்டு அந்த அணிக்கு 5 ரன்கள் பெனால்டி வழங்கப்படும்.

இதையும் படிங்க: ஜஹீர் கானுக்கு அப்றம் ஒரு தரமான ப்ளேயர் இல்லாததே இந்தியாவின் அந்த திண்டாட்டத்துக்கு காரணம் – அஷ்வின் ஆதங்க பேட்டி

4. ஓவர் ரேட்: அது போக குறிப்பிட்ட நேரத்திற்குள் 20 ஓவர்களை வீசி முடிக்கவில்லை என்றால் அதற்கு மேல் வீசும் ஒவ்வொரு ஓவரிலும் உள்வட்டத்திற்கு வெளியே 5க்கு பதில் 4 ஃபீல்டர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

Advertisement