ஜஹீர் கானுக்கு அப்றம் ஒரு தரமான ப்ளேயர் இல்லாததே இந்தியாவின் அந்த திண்டாட்டத்துக்கு காரணம் – அஷ்வின் ஆதங்க பேட்டி

Ashwin
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் 188 ரன்களை சேசிங் செய்யும் போது கேஎல் ராகுல் – ஜடேஜா ஆகியோரது பொறுப்பான ஆட்டத்தால் போராடி வென்ற இந்தியா 2வது போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. குறிப்பாக விசாகப்பட்டினத்தில் முந்தைய நாள் மழை பெய்திருந்ததால் தார்பாய் கொண்டு மூடப்பட்டிருந்த பிட்ச் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்ததை பயன்படுத்தி ஸ்விங் செய்து மிரட்டலாக பந்து வீசிய மிட்சேல் ஸ்டார்க்கிடம் பெட்டி பாம்பாக அடங்கிய இந்தியா வெறும் 117 ரன்களுக்கு சுருண்டு மோசமாக தோற்றது.

MItchell Starc IND vs AUS

முன்னதாக 2017 சாம்பியன்ஸ் டிராபி ஃபைனலில் முகமது அமீர், 2019 உலகக்கோப்பை செமி ஃபைனலில் ட்ரெண்ட் போல்ட், 2021 டி20 உலக கோப்பையில் ஷாஹீன் அப்ரிடி ஆகிய இடது கை வேகப்பந்து வீச்சாளர்களின் ஸ்விங் பந்துகளுக்கு ரோஹித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட இந்திய டாப் பேட்ஸ்மேன்கள் பதில் சொல்ல முடியாமல் சொற்ப ரன்களில் அவுட்டானது இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமானதை யாராலும் மறக்க முடியாது. ஆனால் அந்த தோல்விகளிலிருந்து பாடங்களை கற்காமல் 2023 உலக கோப்பை நடைபெறும் இந்த வருடத்திலும் மிட்சேல் ஸ்டார்க் போன்ற இடது கை வேகப்பந்து வீச்சாளரிடம் ஸ்விங் கால சூழ்நிலைகளில் மீண்டும் இந்திய பேட்ஸ்மேன்கள் கொஞ்சம் கூட முன்னேறாமல் திணறுவது ரசிகர்களை வேதனையடைய வைக்கிறது.

- Advertisement -

அஷ்வின் ஆதங்கம்:
அதன் காரணமாகவே கிரிக்கெட்டில் வலது கை விட இடது கை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு தனித்துவமான மவுசு எப்போதும் இருந்து வருகிறது. இந்நிலையில் அதைத் தெரிந்தும் ஜஹீர் கானுக்கு பின் 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்திய நாட்டில் இதுவரை இந்திய அணி நிர்வாகம் ஒரு தரமான இடது கை வேகப்பந்து வீச்சாளரை கண்டறிந்து உருவாக்காமல் இருப்பதே இந்த பின்னடைவுக்கு முக்கிய காரணம் என்று ரவிச்சந்திரன் அஷ்வின் கூறியுள்ளார்.

nattu

ஜஹீர் கானுக்கு பின் இர்பான் பதான் ஓரளவு நம்பிக்கை கொடுத்தாலும் பெரிய அளவில் ஜொலிக்காத நிலையில் தற்சமயத்தில் அந்த இடத்தை ஈடு செய்வதற்காக வந்த நடராஜனை மறு வாய்ப்பு கொடுக்காமல் பிசிசிஐ கழற்றி விட்டு வருகிறது. அதே போல் அர்ஷிதீப் சிங் நோ-பால்களை போட்டு ரசிகர்களை ஏமாற்றி வரும் நிலையில் இந்திய அணியில் இடது கை வேகப்பந்து வீச்சாளர் இல்லாத முக்கியத்துவத்தை பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அஷ்வின் விவரித்தது பின்வருமாறு.

- Advertisement -

“ஜஹீர் கான் ஓய்வுக்குப் பின் இந்தியா ஒரு சரியான இடது கை வேகப்பந்து வீச்சாளரை கண்டறியவில்லை. அதனால் போட்டியில் வித்தியாசமான கோணத்தை எடுத்து வரும் இடது கை வேகப்பந்து வீச்சாளரை எதிர்கொள்வதில் இந்தியா பிரச்சனையை சந்திக்கிறது என்று பேசி எந்த பயனுமில்லை. 2019 உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் ட்ரெண்ட் போல்ட் பந்தை ஸ்விங் செய்து விராட் கோலியின் விக்கெட்டை எடுத்தார்.அவர்களது கோணத்தை எதிர்கொள்வது முற்றிலும் வித்தியாசமானது. மறுபுறம் வலைப் பயிற்சியில் விராட் கோலி போன்றவர்கள் முகமது ஷமி, உமேஷ் யாதவ், பும்ரா ஆகியோரைத் தான் எதிர்கொள்கிறார்கள்”

“அவர்கள் தரமானவர்கள் என்றாலும் அனைவரும் வலது கை பந்து வீச்சாளர்கள். அதுவே ஒரு இடது கை பந்து வீச்சாளர் ஸ்டம்ப்க்கு ஓவர் திசையிலிருந்து வீசினால் அவரால் திடீரென்று ஸ்டம்ப்களை உள்ளே வந்து தாக்க முடியும். ஆனால் தற்சமயத்தில் எத்தனை வலது கை வேகப்பந்து வீச்சாளர்கள் இன்ஸ்விங் பந்துகளை வீசுகிறார்கள்? எனவே நம்மிடம் இடது கை வேகப்பந்து வீச்சாளர் இல்லாததால் நம்மால் எதிரணி மீது அந்த அழுத்தத்தை போட முடிவதில்லை”

இதையும் படிங்க:இப்போதெல்லாம் ஆஸ்திரேலியர்களிடம் அந்த குணம் காணாம போய்டுச்சு, அதுக்கு காரணம் இந்தியா தான் – விராட் கோலி ஓப்பன்டாக்

“அதை புரிந்து கொல்லாமல் இடதுகை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக இந்திய பேட்ஸ்மேன்கள் தடுமாறுவதாக அனைவரும் பேசுகின்றனர். இடது கை கோணமே எதிரணியிடம் மிகப்பெரிய பலமாக இருக்கிறது. மேலும் அனைத்து அணிகளிலும் இடது கை பவுலர்களை வைத்து தான் அணியின் தேர்வு இருக்கும். அனைத்து ஐபிஎல் அணிகளும் அவர்களுக்கு அதிக முக்கியத்துவத்தை கொடுக்கின்றனர். ஏனெனில் இடது கை வேகப்பந்து வீச்சாளர்கள் கிட்டத்தட்ட அனைத்து பேட்ஸ்மேன்களிடம் சிரமத்தை ஏற்படுத்துகிறார்கள்” என்று கூறினார்.

Advertisement