இப்போதெல்லாம் ஆஸ்திரேலியர்களிடம் அந்த குணம் காணாம போய்டுச்சு, அதுக்கு காரணம் இந்தியா தான் – விராட் கோலி ஓப்பன்டாக்

KL Rahul Virat Kohli Matthew Wade Hardik Pandya
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் வீழ்ச்சிக்கு பின் வளர்ச்சி கண்ட ஆஸ்திரேலியா 1989, 1999, 2003, 2007, 2015 என 5 உலகக் கோப்பைகளை அசால்ட்டாக வென்று உலகின் வெற்றிகரமான கிரிக்கெட் அணியாக ஜொலித்து வருகிறது. அதே போல் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் நம்பர் ஒன் அணியாக திகழும் ஆஸ்திரேலியா 2021 டி20 உலகக் கோப்பையை வென்று அனைத்து ஏரியாவிலும் கில்லியாக கிரிக்கெட்டின் அசுரனாக திகழ்கிறது என்றே சொல்லலாம். அதனாலேயே அந்த அணிக்கு இந்தியா உட்பட உலகின் அனைத்து நாடுகளிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். அதற்கு தரமான வீரர்களை பெற்றுள்ளார்கள் என்பதை தாண்டி களத்தில் இறக்கமற்ற போராட்ட குணத்துடன் விளையாடுவதே ஆஸ்திரேலியர்கள் இந்தளவுக்கு வெற்றிகரமாக செயல்படுவதற்கு முக்கிய காரணமாகும்.

australia

- Advertisement -

அதனால் தோற்றாலும் போராடி தோற்கும் குணத்தை கொண்டவர்கள் ஆஸ்திரேலியர்கள் என்று வல்லுனர்கள் பாராட்டுவார்கள். அதை விட வெற்றி பிரகாசமாக இருக்கும் போதும் கூட சர்வ சாதாரணமாக எதிரணி வீரர்களை ஸ்லெட்ஜிங் செய்து கவனத்தை திசை திருப்பி வெற்றி காண்பதில் ஆஸ்திரேலியர்களுக்கு நிகர் யாரும் கிடையாது என்றும் சொல்வார்கள். ஆனால் சமீப காலங்களில் கோடிக்கணக்கான ரூபாய்களை சம்பளமாக கொட்டிக் கொடுக்கும் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி மற்றும் இந்திய வீரர்களிடம் ஆஸ்திரேலிய வீரர்கள் நட்புடன் பழகுவதாக அந்நாட்டை சேர்ந்த சில முன்னாள் வீரர்கள் விமர்சித்துள்ளார்கள்.

குணம் மாறிடுச்சு:
அதுவே 70 வருடங்களில் முதல் முறையாக 2018/19, 2020/21 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் சொந்த மண்ணில் இந்தியாவிடம் ஆஸ்திரேலியா தோற்பதற்கு முக்கிய காரணம் என்றும் அவர்கள் தெரிவிக்கிறார்கள். இந்நிலையில் ஒரு காலத்தில் முரட்டுத்தனமாக ஸ்லெட்ஜிங் செய்வதை வழக்கமாக வைத்திருந்த ஆஸ்திரேலியர்களின் குணம் தற்போது ஐபிஎல் தொடரால் மாறியுள்ளது உண்மை தான் என்று விராட் கோலி வெளிப்படையாக தெரிவித்துள்ளார். ஆனால் நட்புடன் பழகுகிறார்களே தவிர அதற்காக தங்களது நாட்டுக்காக போட்டியை விட்டுக் கொடுக்காமல் இப்போதும் ஆஸ்திரேலியா கடுமையான சவாலை கொடுப்பதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

paine 1

“ஐபிஎல் சிலவற்றை மாற்றியுள்ளது. குறிப்பாக ஆஸ்திரேலியாவுடனான கிரிக்கெட் இப்போதும் போட்டியுடன் இருக்கிறது. ஆனால் அவர்கள் கடுமையான வாய்மொழிகள் மற்றும் ஸ்லெட்ஜிங் செய்வது காணாமல் போய்விட்டது. தற்போது பரஸ்பர மரியாதை மற்றும் பாராட்டுக்கான விளையாட்டாக மாறியுள்ளது. இருப்பினும் அவர்களுக்கு இன்னும் வெற்றிக்கான அதே பசி இருக்கிறது என்று சொல்லலாம். ஐபிஎல் வந்த பின் இரு அணிகளுக்கிடையே இருந்த பதற்றத்தை உருவாக்கும் விஷயங்கள் கணிசமாக குறைந்துள்ளன. அதைத்தான் இந்த வருடம் நான் குறைந்தேன்”

- Advertisement -

“ஆனால் அவர்களது போட்டியிடும் தன்மை எந்த வகையிலும் குறையவில்லை. 2017 பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் நான் எந்த ஆஸ்திரேலிய வீரர்களுடன் நட்பு பாராட்ட விரும்பவில்லை. ஆனால் தற்போது அது மாறியுள்ளது. பொதுவாக அனல் பறக்க மோதும் போது நீங்கள் போட்டியுடன் இருக்க வேண்டும் என்று நான் கூறுவேன். ஆனால் தற்போது என்னுடைய அந்த கூற்று தவறாகியுள்ளது. எனவே முதல் போட்டிக்கு முன்பாக நான் சொன்னதை மீண்டும் சொல்வேன் என்பதை நீங்கள் பார்க்க முடியாது. இப்படி இருப்பதும் நல்ல விஷயம் என்று நினைக்கிறேன்”

Virat-Kohli

“இருப்பினும் உலகக்கோப்பை போன்ற பெரிய தொடர்களில் எப்படியாக இருந்தாலும் அது போன்ற பதற்றமான சூழ்நிலைகள் உருவாகும் போது நீங்கள் அதை பார்க்க போகிறீர்கள். எனவே முடிந்தளவு வீரர்களுக்குள் தோழமை இருப்பது மகிழ்ச்சியாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். அதே சமயம் கேவலமான வார்த்தைகளால் மோதிக் கொள்வதை விட நட்புடன் போட்டி தன்மையுடன் இருப்பதில் வேடிக்கையாக உள்ளது” என்று கூறினார்.

இதையும் படிங்க:தோனிக்கு நேச்சுரலாவே அந்த டேலன்ட் இருக்கு. இப்போவும் அவரால கோலிக்கு சவால் விட முடியும் – சீக்கா புகழாரம்

முன்னதாக 2014இல் மிட்சேல் ஜான்சன், 2017இல் ஸ்டீவ் ஸ்மித், 2019இல் டிம் பைன் போன்ற ஆஸ்திரேலிய வீரர்களுடன் விராட் கோலி நேருக்கு நேர் மோதியதை யாராலும் மறக்க முடியாது. இருப்பினும் 2023 பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் அது போல இரு அணிகளைச் சேர்ந்த எந்த வீரர்களுமே மோதிக் கொள்ளவில்லை என்பது இப்போதெல்லாம் அவர்கள் நட்பாக மாறிவிட்டார்கள் என்பதை தெளிவாக காட்டுகிறது.

Advertisement