தோனிக்கு நேச்சுரலாவே அந்த டேலன்ட் இருக்கு. இப்போவும் அவரால கோலிக்கு சவால் விட முடியும் – சீக்கா புகழாரம்

Srikanth
- Advertisement -

இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற இருக்கும் 16-வது ஐபிஎல் தொடரானது தற்போதே அனைவரது மத்தியிலும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இவ்வேளையில் இந்த 2023-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கோப்பையின் அறிமுக விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இந்திய அணியின் முன்னாள் வீரர்கள கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் மற்றும் பத்ரிநாத் ஆகியோர் கலந்துகொண்டு ஐபிஎல் கோப்பையை அறிமுகம் செய்தனர்.

IPL 2022 (2)

- Advertisement -

அப்போது அவர்கள் இருவரிடமும் கிரிக்கெட் குறித்த பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. அந்த கேள்விகளுக்கு எல்லாம் அவர்கள் இருவரும் பதிலளித்தனர். அதன்படி இந்த 2023-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் எவ்வாறு அமையப் போகிறது? என்ற கேள்விக்கு பதில் அளித்த சீக்கா கூறுகையில் :

மற்ற அனைத்து ஐபிஎல் தொடர்களை விடவும் இந்த தொடரானது மிகவும் விறுவிறுப்பாக நடைபெறும். ஏனெனில் முந்தைய தொடர்களை விட தற்போதைய தொடரில் கூடுதலாக அணிகளும், கூடுதலாக சில வீரர்களும் இடம் பெற்றுள்ளதால் இந்த தொடர் நிச்சயம் நமக்கு விறுவிறுப்பான போட்டிகளை தரும் என்று தெரிவித்தார்.

Kohli dhoni

மேலும் சென்னை அணியில் எந்தெந்த வீரர்கள் முக்கிய வீரர்களாக இருப்பார்கள் என்ற கேள்விக்கு பதில் அளித்த பத்ரிநாத் கூறுகையில் : சென்னை அணியை பொறுத்தவரை ரவீந்திர ஜடேஜா, மொயின் அலி மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகிய மூன்று பேரும் இம்பேக்ட் வீரர்களாக இருப்பார்கள் என்றும் அதில் ரவீந்திர ஜடேஜா கீ பிளேயராக இருப்பார் என்றும் கூறினார்.

- Advertisement -

மேலும் அவரே இந்த தொடரில் சிறந்த பினிஷராக இருப்பார் என்றும் பத்ரிநாத் கூறியுள்ளார். அதன் பின்னர் தொடர்ந்து சி.எஸ்.கே அணியின் கேப்டன் தல தோனி குறித்து பேசிய சீக்கா கூறுகையில் :

இதையும் படிங்க : IND vs AUS : கடைசி போட்டிக்கான இந்திய அணியில் தைரியமாக ரிஸ்க் எடுத்த ரோஹித் சர்மா – இது வொர்க் ஆகுமா?

தோனி, கபில் தேவ் ஆகியோர் எப்போதுமே கிரிக்கெட் சிறப்பாக விளையாடக் கூடியவர்கள். ஏனெனில் இயற்கையாகவே அவர்கள் ஒரு நேச்சுரல் அத்லெட்ஸ். தோனியும் ஒரு இயற்கையான அத்லெட் வீரர் தான் இப்போது கூட அவரால் விராட் கோலிக்கு இணையாக ரன்னிங் ஓட முடியும் என்று சீக்கா புகழாரம் சூட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement