IND vs AUS : கடைசி போட்டிக்கான இந்திய அணியில் தைரியமாக ரிஸ்க் எடுத்த ரோஹித் சர்மா – இது வொர்க் ஆகுமா?

Rohith
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரானது தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்த வேளையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று தொடரில் ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமநிலை இருக்கிறது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியானது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சற்றுமுன் துவங்கியது.

IND-vs-AUS-1

- Advertisement -

இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் கைப்பற்றுவதோடு மட்டுமின்றி ஐசிசி ஒருநாள் தரவரிசைக்கான பட்டியலிலும் முதலிடத்திற்கு முன்னேறவும் வாய்ப்பு உள்ளது.

எனவே இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த மூன்றாவது போட்டி தற்போது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இந்த போட்டிக்கான இந்திய அணியில் எந்த ஒரு மாற்றத்தையும் செய்யாமல் இந்திய அணியின் ரோகித் சர்மா தைரியமான முடிவு ஒன்றினை எடுத்துள்ளார்.

Kuldeep Yadav Ind Shubman gill kl rahul

அதன்படி இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்த வேளையில் இரண்டாவது போட்டியின் போது ஆஸ்திரேலியா அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில் மூன்றாவது போட்டிக்கான இந்திய அணியில் ஏதாவது மாற்றம் நிகழுமா என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.

- Advertisement -

ஆனால் இன்றைய மூன்றாவது போட்டிக்கான அணியில் எந்த ஒரு மாற்றத்தையும் செய்யாமல் கடந்த போட்டியில் விளையாடிய அதே இந்திய அணி தான் இந்த போட்டியிலும் விளையாடும் என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தைரியமாக முடிவினை எடுத்துள்ளார். அதன்படி இன்றைய மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ:

இதையும் படிங்க : ஷ்ரேயாஸ் ஐயருக்கு ஏற்பட்டுள்ள இந்த பிரச்சனையால 4-5 மாசம் விளையாடவே முடியாது – வெளியான மருத்துவ அறிக்கை

1) ரோஹித் சர்மா, 2) சுப்மன் கில், 3) விராட் கோலி, 4) சூரியகுமார் யாதவ், 5) கே.எல் ராகுல், 6) ஹார்டிக் பாண்டியா, 7) ரவீந்திர ஜடேஜா, 8) அக்சர் படேல், 9) முகமது ஷமி, 10) முகமது சிராஜ், 11) குல்தீப் யாதவ்.

Advertisement