இளம் வீரர்களை ராக்கிங் (Ragging) செய்யும் பயிற்சியாளர்..! – வைரலாகும் வீடியோ

krunal

இந்திய அணி 5 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட இங்கிலாந்து சென்றுள்ளது. இந்த தொடரின் முதல் டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்திய டி20 அணியில் இளம் வீரர்களான க்ருனல் பாண்டியா மற்றும் தீபக் சஹர் இடம்பெற்றுள்ளனர்.


ஆனால், இவர்களுக்கு மீதமுள்ள இரண்டு டி20 போட்டியில் வாய்ப்பளிக்கபடும் என்று எதிர்பார்கபடுகிறது. இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் இந்திய அணியின் ட்ரெஸ்ஸிங் ரூமில் மிக வித்யாசமான முறையில் நேர்காணல் நடந்துள்ளது.

அதில் இவர்கள் இருவரும் நாற்காலி மீது ஏறி நின்று தங்களை பற்றிய சுய அறிமுகத்தை செய்துள்ளனர். தற்போது அந்த வீடியோ பதிவு வெளியாகியுள்ளது. வெறும் வேடிக்கைக்காக எடுக்கப்பட்ட இவர்களது வீடியோ பதிவை எடுத்தது வேறு யாரும் இல்லை , நம் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் தான்.

இந்த வீடியோவை எடுத்து மட்டுமல்லாமல் அதனை இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார் ஷிகர் தவான். இந்த வேடிக்கையான வீடியோ பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் ஹாட் வீடியோவாக வலம் வந்து கொண்டிருக்கிறது